நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது நோர்வூட் நகரில் புதிதாக ஒரு மதுபானசாலை திறப்பதற்கு எதிராக இன்று 06.05.2026 திகதி காலை 9.00.மணி முதல் 10.30. மணி வரை நோர்வூட் நகர மக்கள் மற்றும் நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெருந்தோட்ட மக்கள் இணைந்து கருப்பு நிற கொடி ஏற்றி நோர்வூட் நகரில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களை பூட்டி போராட்டம் ஒன்றை நடத்தினார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஏற்கனவே 4 மதுபானசாலைகள் உள்ளன. மேலும் மேலும் ஏன் மதுபானசாலை, மலையக மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் திட்டமிட்டு மதுபான விற்பனை நிலையங்கள் திறப்பது எதற்காக, அடுத்த அடுத்த வரும் அரசாங்கங்கள் நுவரெலியா மாவட்டத்தில் அதிகளவில் மதுபான விற்பனை நிலையங்கள் திறப்பது யார் நன்மைக்காக, இலக்கு வைப்பது பெருந்தோட்ட தொழிலாளர்களை என கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகருக்கு ஒரு ( ச.தோ.ச) கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் திறக்கபட்டு அப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் நலன் பேண இன்றைய அரசாங்கம் முன் வர வேண்டும்.
அதனைத் தவிர்த்து நுவரெலியா, கண்டி, பதுளை மாவட்டங்களில் இனியும் ஒரு மதுபான விற்பனை நிலையங்கள் கூட திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்ற கோரிக்கை முன் வைத்து இப் போராட்டம் சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்றது.











