உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

மிக மோசமான கைதிகள் இருந்த கிங்ஸ்டன் சிறைச்சாலையில் 700 வீடுகள் கட்டத் திட்டம்!

உலக செய்திகள் 5 மாதங்கள் முன்
43 பார்வைகள்

கனடாவின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் அச்சமூட்டும் சிறைச்சாலைகளில் ஒன்றான ‘கிங்ஸ்டன் பெனிடென்ஷியரி’ (Kingston Penitentiary) வளாகத்தை ஒரு பாரிய வீட்டுத் திட்டமாக மாற்றுவதற்கு மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

கனடாவின் மிக மோசமான குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கிங்ஸ்டன் சிறைச்சாலை வளாகத்தில், சுமார் 700 குடியிருப்புகளைக் கொண்ட ஒரு பிரம்மாண்ட வீட்டுத் திட்டத்தை உருவாக்கப் பொதுச் சேவைகள் மற்றும் கொள்முதல் கனடா (PSPC) திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகமான சிபிசி (CBC) செய்தி வெளியிட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஆவணங்களின்படி, இந்த 10 ஹெக்டேர் பரப்பளவிலான வரலாற்றுச் சின்னத்தின் பின்பகுதியைத் தரைமட்டமாக்கி, ஒன்டாரியோ ஏரியைப் பார்த்தவாறு உயர்ந்த கட்டிடங்களை (High-rise buildings) உருவாக்க அரசு உத்தேசித்துள்ளது.

உள்நாட்டு மின்னஞ்சல்களில் இந்தத் திட்டம் “தூங்கும் அரக்கனை” (Sleeping giant) எழுப்பும் முயற்சி என வர்ணிக்கப்பட்டுள்ளது.

1835 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சிறைச்சாலை, கனடா ஒரு நாடாக உருவாவதற்குப் பல தசாப்தங்களுக்கு முன்னரே இயங்கி வந்தது.சீரியல் கில்லர் பால் பெர்னார்டோ மற்றும் ரசல் வில்லியம்ஸ் போன்ற கனடாவின் மிக மோசமான குற்றவாளிகள் இங்கு அடைக்கப்பட்டிருந்தனர்.

அதன் கட்டிடக்கலை மற்றும் வரலாற்றுச் சிறப்பால் 1990 இல் இது ‘தேசிய வரலாற்றுச் சின்னம்’ என அறிவிக்கப்பட்டது.2013 இல் இது நிரந்தரமாக மூடப்பட்டது.இந்தத் திட்டம் குறித்து கிங்ஸ்டன் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் கெரட்சன் ஆச்சரியம் வெளியிட்டுள்ளார்.

சிறைச்சாலை அருங்காட்சியகத்தின் வரலாற்றாசிரியர் டேவ் செயின்ட் ஓங்கே கூறுகையில், “இந்த இடம் கனடாவின் சிறைச்சாலைத் துறையின் பிறப்பிடமாகும்.இங்கு மனித வாழ்வின் அனைத்து உணர்வுகளும் புதைந்துள்ளன,” என்றார்.

இத்திட்டம் கிங்ஸ்டனின் பாரம்பரியத்தை அழிப்பதுடன், சுற்றுலா மற்றும் திரைப்படப் படப்பிடிப்புகள் மூலம் கிடைக்கும் மில்லியன் கணக்கான வருவாயைப் பாதிக்கும் எனவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், நாட்டில் நிலவும் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய இத்தகைய பெரிய இடங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசுத் தரப்பு ஆர்வமாக உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

98 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

94 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

101 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

32 0 0