உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மன்னாரில் கடல் தொழில் சட்டங்கள் தொடர்பாக   மீனவ சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்  !

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
36 பார்வைகள்

கடல் தொழில் சட்டங்கள் மற்றும் கடற்கரையோர பாதுகாப்பு தொடர்பாக  மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவ சங்க பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல்     யுனைப்ஸ்(UNOPS)  நிறுவனத்தின் நிதி அனுசரணையில்   மன்னார் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட செயலக    மண்டபத்தில்  இன்று வெள்ளிக்கிழமை  ஏப்ரல் 17 ஆம் திகதி  இடம்பெற்றது.

மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இடம்பெற்ற குறித்த கருத்தமர்வில் விரிவுரையாளராக யாழ் பல்கலைக்கழகத்தின் கடற்றொழில் சார் ஆய்வு மாணவன் எஸ்.திவ்யன் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினார்.

  கடற்றொழில் சட்டங்கள் மற்றும் கரையோர பாதுகாப்பு தொடர்பில் மீனவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கும் முகமாக குறித்த  விழிப்புணர்வு செயல் அமர்வு    இடம்பெற்றது .

மீன் வளம் அருகி வரும் நிலையில் மீனவர்களின் தற்போதைய நிலை குறித்தும் மீனவர்கள் எதிர்கொள்ளும் மீன்பிடி நடவடிக்கையிலான சட்டங்கள் குறித்தும் மீனவர்களுக்கு தெளிவு படுத்தி கடல் வளத்தையும் மீன்பிடி சட்டங்களையும் கடைப்பிடித்து வளமான ஒரு கடல் வளத்தையும் கடல் பாதுகாப்பையும் மீனவர்கள் தாமாக ஏற்படுத்திக் கொள்ளும் விதத்தில் குறித்த செயல் அமர்வு இடம்பெற்றது.

 அரசாங்கத்தை, திணைக் களங்களையும் சாராமல் மீனவர்கள் தன்னிச்சையாக குறித்த வளங்களை பாதுகாத்து தமது எதிர்கால சந்ததிக்கு குறித்த வளத்தை கையளிப்பது இதன் நோக்கமாக அமைந்தது.மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 40 க்கும் மேற்பட்ட மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

குறித்த விழிப்புணர்வு கருத்தமர்வின் போது மீனவர்கள் அக்கறையுடன் செயல்பட  அறிவுறுத்தல் விடுக்கப்பட்ட தோடு, எதிர்கால சந்ததிக்கு பாதுகாப்பான ஒரு கடல் வளத்தை கையளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது  .

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

24 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

46 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

72 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

65 0 0