மத்திய மலைநாட்டில் நுவரேலியா மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக நுவரேலியா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் இப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெப்பம் காரணமாக இப் பகுதியில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் வெகுவாக குறைந்து காணப்பட்டன.
இந்நிலையில் தற்போது அங்கு கன மழை பெய்து வருவதால் மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை அண்மித்துள்ளது.
காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 27.05 அடி மட்டுமே குறைவாக காணப்படுகின்றது.
விமல் சுரேந்திர நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 9 அடி மட்டுமே குறைவாக உள்ளது.
அத்துடன் கென்யோன் நீர்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 9 அடி குறைவாகவும்
லக்சபான நீர் தேக்க தத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 8 குறைவாகவும்,
மேல் கொத்மலை நீர் தேக்கம் கொத்மலை நீர் தேக்கம் ஆகியனவும் அவற்றின் கொள்ளளவை அண்மித்துள்ளன.
தொடர்ந்து நுவரேலியா மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது.










