• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 26, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

ஊழல்களை ஒழிக்கவும், போதைவஸ்தை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியன!

admin by admin
December 7, 2025
in இலங்கை செய்திகள்., மன்னார் செய்திகள்
0
ஊழல்களை ஒழிக்கவும், போதைவஸ்தை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியன!
Share on FacebookShare on Twitter

புதிய அரசாங்கம் ஊழல்களை ஒழிக்கவும், போதைவஸ்தை கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை உறுதியாக்கவும் எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியன. ஆயினும் தமிழர் நில அபகரிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, இறுதிப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கான பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற விடயங்களில் இந்த அரசாங்கம் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது கவலைக்குரிய விடயம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இறைவனின் இரக்கத்தாலும், புனித ஆட்சிபீடத்தின் ஆதரவாலும் மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை மறைமாவட்ட இறைமக்களுக்கு எழுதும், திருவருகைக் காலத் திருமடல் – 2025 இல் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மடலில் மேலும் குறிப்பிடுகையில்,’திருவருகைக்காலம் இறைப்பற்றும், மகிழ்ச்சியும் நிறைந்த எதிர்பார்ப்பின் காலமாக விளங்குகிறது. இயேசுவின் பிர சன்னத்தை – உடனிருப்பை ஆழமாக உணர்கின்ற ஒரு சிறப்பான சந்தர்ப்பம் இந்தத் திருவருகைக்காலம். ‘கடவுள் நம்மோடு இருக்கிறார்’ என்ற ஆறுதலின் செய்தியை தனது திரு பிறப்பின் மூலம் இறைமகன் இயேசு மீளவும் இந்நாட்களில் நமக்கு வலியுறுத்துகின்றார்.

எனவே கடவுளின் உடன் இருப்பையும், அவருடைய அளவுகடந்த அன்பையும் இன்னும் ஆழமாக இந்தக் காலத்தில் உணர்ந்து, இறைமகன் இயேசுவின் வருகைக்கு நம்மை தகுந்த முறையில் ஆயத்தம் செய்வோம்.

ஆண்டுதோறும் நடைபெறும் மன்னார் மறைமாவட்ட மேய்ப்பு பணி மாநாடு இவ்வாண்டும் கடந்த ஒக்டோபர் மாதம் 27, 28, 29 ஆகிய தினங்களில் மன்னாரில் சிறப்பாக நடைபெற்றது. 2026 ஆம் ஆண்டு மன்னார் மறை மாவட்டத்தில் ‘தூய ஆவியின் ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூய ஆவியை மையப்பொருளாக கொண்டு இந்த மாநாடு நடைபெற்றது. குருக்கள், துறவியர், பொதுநிலையினர் என ஏறக்குறைய 200 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு பங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தீர்மானங்களை அடியொற்றி ஒவ்வொரு பங்கும், ஆணைக்குழுவும், துறவற இல்லமும் தமது சூழ்நிலை, வசதி, வாய்ப்புகளை கவனத்தில் கொண்டு தமக்கான பிரத்தியேகமான மேய்ப்புப்பணி திட்டங்களைத் தீட்ட வேண்டும்.

இந்த மாநாட்டின்போது பங்குகள் ரீதியாக எடுக்கப்படும் தீர்மானங்களையும் உள்ளடக்கியதாக பங்குமட்ட இறுதித் தீர்மானங்கள் அமைய வேண்டும். புதிய ஆண்டின் முதல் நாளில் இருந்து புதிய ஆண்டுக்கான மேய்ப்புப் பணித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

மன்னார் மறைமாவட்டத்தில் காற்றாலைகளை அமைக்கும் திட்டமும், கனிய மணல் அகழ்வுத் திட்டமும் பாரிய பிரச்சினைகளாக உள்ளன. மன்னார் தீவில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 30 காற்றாடிகளோடு மேலும் 14 காற்றாடிகள் அமைப்பதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளது.

ஆயினும் இனி வரும் காலங்களில் மேலதிகமாக காற்றாடிகள் அமைக்கப்படமாட்டாது என்ற உறுதிப்பாட்டை அமைச்சரவைத் தீர்மானமாக நிறைவேற்றி அரசாங்கம் தந்துள்ளது. எனவே இதனையொட்டி மன்னாரில் இடம் பெற்றுவந்த மக்களின் தொடர் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

கனிய மணல் அகழ்வு மன்னார் தீவில் முற்றாக இடம்பெறாது என்ற வாக்குறுதியையும் அரசாங்கம் தந்திருக்கின்றது. கனிய மண் அகழ்வுக்கு நிறுவனங்களின் அலுவலகங்கள் மன்னாரில் இயங்க முடியாது எனவும், கனிய மணல் அகழ்வு ஒருபோதும் நடைபெறாது எனவும் அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றவும் அரசு வாக்குறுதி தந்துள்ளது. அரசு மக்களுக்கு கொடுத்த இந்த வாக்குறுதியை தவறாமல் நிறை வேற்றும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

முழு இலங்கை நாட்டையும் உலுக்கிய வெள்ள அனர்த்தம் நம்முடைய மறைமாவட்டத்தையும் வெகுவாக பாதித்துள்ளது. நம் மக்களில் சிலர் தம் இன்னுயிரை இழந்துள்ளனர். பலர் அகதிகளாக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து எண்ணில்லாத பொருட்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏராளமான விளைநிலங்கள் அழிவுக்குள்ளாகி உள்ளன. கால்நடைகள் பல இறந்துள்ளன. இந்நிலையில் நிவாரண நடவடிக்கைகள் அரசினாலும், நம் மறைமாவட்ட திருச்சபையாலும், ஏனைய சில பொது அமைப்புகளாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிப்புக்குள்ளாகாத மக்கள் பெருந்தன்மையோடு உதவிக்கரம் நீட்டி, பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க முன்வர வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துள்ள புதிய அரசாங்கம் ஊழல்களை ஒழிக்கவும், போதைவஸ்தை கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை உறுதியாக்கவும் எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியன.

ஆயினும் தமிழர் நில அபகரிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, இறுதிப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கான பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணை, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற விடயங்களில் இந்த அரசாங்கம் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

எனவே இந்தச் சூழ்நிலையில் தமிழர் நலன் சார்ந்துள்ள தமிழ் அரசியல் கட்சிகளும் ஏனைய அமைப்புக்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டு தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்ட தொடர்ந்து பற்றுறுதியோடு ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என குறித்த மடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த இறை மடலானது இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (07) மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் காலை திருப்பலியின் போது மக்களுக்கு வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வாகனம் செலுத்துவோருக்கு எச்சரிக்கை!

by selvan
May 25, 2026
0

சிதைக்கப்பட்ட அல்லது தரப்படுத்தப்படாத போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே....

அச்சிடப்பட்ட காப்புறுதி அட்டைகள் இனி வழங்கப்பட மாட்டாது!

அச்சிடப்பட்ட காப்புறுதி அட்டைகள் இனி வழங்கப்பட மாட்டாது!

by selvan
May 25, 2026
0

வாகனங்களுக்கான அச்சிடப்பட்ட காப்புறுதி அட்டைகள் இனி வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்குப் பதிலாக, இனிமேல் QR குறியீடு மற்றும் கைபேசி மூலம் பெறக்கூடிய டிஜிட்டல் காப்புறுதி...

இந்திய அரசால் இலங்கை பொலிசாருக்கு 134 கெப் ரக வாகனங்கள் அன்பளிப்பு

by selvan
May 25, 2026
0

இந்திய அரசாங்கத்தினால் இலங்கை பொலிஸாரின் பயன்பாட்டிற்காக, அன்பளிப்பாக வழங்கப்பட்ட 134 கெப் ரக வாகனங்கள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று  கையளிக்கப்பட்டன.இன்று (25) முற்பகல்...

கொழும்பில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம்

கொழும்பில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம்

by selvan
May 25, 2026
0

‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்ட மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 1,265,270 ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு கடற்றொழில், நீரியல்...

தற்கொ*லை செய்துகொண்ட வித்தியா வழக்கின் குற்றவாளியினது சடலத்தை பொறுப்பேற்க அவரது மனைவி மறுப்பு!

தற்கொ*லை செய்துகொண்ட வித்தியா வழக்கின் குற்றவாளியினது சடலத்தை பொறுப்பேற்க அவரது மனைவி மறுப்பு!

by selvan
May 25, 2026
0

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொ*லை வழக்குடன் தொடர்புடைய குற்றவாளியின் இறுதி சடங்கை அரச செலவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பூபாலசிங்கம் ஜெயக்குமார் (வயது 46)...

வடக்கில் வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு!

வடக்கில் வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு!

by selvan
May 25, 2026
0

வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த...

பொய் வழக்கிற்கான வாக்குமூலம் என்னிடம் பெறப்பட்டது!

பொய் வழக்கிற்கான வாக்குமூலம் என்னிடம் பெறப்பட்டது!

by selvan
May 25, 2026
0

பொலிசார் தாக்கல் செய்த பொய் வழக்கிற்கான வாக்குமூலம் நேற்றையதினம் பதிவு செய்யப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்...

உடலில் காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம்  மீட்பு!

by selvan
May 25, 2026
0

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறைப் பகுதியில், உடலில் காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம்  மீட்க்கப்பட்டுள்ளது.இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-உன்னிச்சை, நெடியமடுப் பகுதியைச் சேர்ந்த...

மன்னாரில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை!

மன்னாரில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை!

by selvan
May 25, 2026
0

மன்னார் மாவட்டத்தில் படையினர் வசமுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டச் செயலகத்தில் பாதுகாப்புப் பிரதி...

விமல் வீரவன்ச பிணையில் விடுதலை!

விமல் வீரவன்ச பிணையில் விடுதலை!

by selvan
May 25, 2026
0

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச, இன்று கைது செய்யப்பட்ட நிலையில் கடுவல நீதவான் நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்துள்ளது. பத்தரமுல்லையில் தேசிய...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி