• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, July 7, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மூட்டுவாத விழிப்புணர்வு தினம் இன்று!

admin by admin
October 12, 2025
in இலங்கை செய்திகள்., கட்டுரைகள்
0
மூட்டுவாத விழிப்புணர்வு தினம் இன்று!
Share on FacebookShare on Twitter

உலக மூட்டுவாத விழிப்புணர்வு தினம் ஒக்டோபர் 12 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆர்த்திரைட்டிஸ் (Arthritis) என்பது மூட்டுகளில் ஏற்படும் நீடித்த வலி, வீக்கம், உறுதிப்பாடு போன்ற பிரச்சினைகளால் ஒருவரின் நாளாந்த வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் தமது இயல்பான இயக்கத்தை இழந்து, மனஅழுத்தத்துடனும், உடல் வலியுடனும் வாழ வேண்டிய சூழல் உருவாகிறது.

இந்நிலையில், பலர் முதலில் மேற்கத்திய (ஆங்கில) மருத்துவத்தை நாடுகிறார்கள்.

மேற்கத்தேய மருத்துவத்தை நாடிச்சென்ற பல நோயாளிகள் தமது முழங்கால் மூட்டுகளை மேலும் பாதிப்புறச் செய்து கால்களை வளையச்செய்து ஆங்கில மருத்துவத்தால் கைவிடப்பட்ட நிலையிலேயே சித்த மருத்துவமனைகளை நாடிவருகின்றனர். ஆங்கில மருந்துகள் தற்காலிக நிவாரணம் அளித்தாலும், அதன் பக்கவிளைவுகள் உடலை மேலும் பாதிக்கின்றன. வலி குறைப்பதற்கான மருந்துகள் காலப்போக்கில் சிறுநீரகம், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் அபாயம் அதிகம். இவ்வாறு, “இருப்பதையும் இழக்க நேரிடும்” நிலையை நோயாளிகள் எதிர்கொள்ள நேரிடுகிறது. ஆங்கில மருந்துகள் உடலை மேலும் பாதிக்கின்றன. மாறாக, சுதேச மருத்துவம் – சித்தம், ஆயுர்வேதம், யுனானி போன்ற பாரம்பரிய முறைகள் – நோயின் மூல காரணத்தை ஆராய்ந்து, உடல் தாதுக்கள் சமநிலையைக் காக்கும் வழியில் செயல்படுகின்றன. சித்த மருத்துவத்தில் ‘வாத நோய்கள்’ என வகைப்படுத்தப்படும் ஆர்த்திரைட்டிஸ் நோய், உணவு பழக்கவழக்கம், வாழ்க்கை முறை, உடல் தாதுக்கள் சமநிலையின்மை ஆகியவற்றின் விளைவாக கருதப்படுகிறது.

இதற்கு சித்த மருந்துகள் மூலமாக உடலில் தேங்கிய வாதத்தை நீக்கி, இரத்த சுழற்சியை மேம்படுத்தி, மூட்டுகளில் ஏற்பட்ட கடினத்தன்மையையும் வலியையும் குறைத்து உடல் இயக்கத்தை மீட்டெடுக்க உதவுகின்றன. நோயாளி முழுமையாக ஆரோக்கியம் பெறுவது சாத்தியம்.

சுதேச மருத்துவம் நோயை குணப்படுத்துவதற்கு பின், அதே நோய் மீண்டும் வராமல் தடுக்கும் தன்மையையும் கொண்டுள்ளது. இவை உடலையும், மனதையும் ஒருங்கிணைந்த முறையில் குணப்படுத்தும் முழுமையான மருத்துவ முறை எனலாம்.

அதனால், ஆர்த்திரைட்டிஸ் நோய்க்கு சுதேச மருத்துவமே நம்பகமான, நீடித்த தீர்வு ஆகும். இம்மருத்துவம் தாய்மண்ணின் பாரம்பரிய ஞானத்தின் சான்றாக இருந்து, இன்றைய தலைமுறையினருக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் வழியாக திகழ்கிறது.

ஆங்கில வைத்திய முறையில் இதுவரை எந்தவிதமான நிரந்தர மருத்துவமும் இல்லை. நோயை முழுமையாக குணப்படுத்தும் மருந்து இல்லாத நிலையில், நோயாளிகளை தவறாக வழிநடத்துவது நியாயமல்ல. ஆங்கில மருத்துவத்தில் தற்போது வழங்கப்படும் மருந்துகள் – வலி நிவாரணி (pain killers), வீக்கம் குறைக்கும் (anti-inflammatory) மற்றும் நோய் வளர்ச்சியை தாமதப்படுத்தும் மருந்துகள் – தற்காலிக நிவாரணத்தையே அளிக்கின்றன. ஆனால் இவை நோயின் அடிப்படை காரணத்தை குணப்படுத்துவதில்லை.

“மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி தவறான வாக்குறுதிகள் அளிப்பது மருத்துவ நெறிமுறைக்கு எதிரானது. மருத்துவர் ஒருவரின் கடமை உண்மையை வெளிப்படையாகச் சொல்லி, நோயாளிக்கு சரியான வழிகாட்டுதல் வழங்குவதாகும். ஆர்த்திரைட்டிஸ் போன்ற நீடித்த நோய்களுக்கு உணவு பழக்கம், வாழ்க்கை முறை, உடற்பயிற்சி மற்றும் சித்த மருத்துவ சிகிச்சைகள் இணைந்த முழுமையான அணுகுமுறையே அவசியம்.

“சித்த மருத்துவம் உடலின் தாதுக்கள் சமநிலை பெறும் வகையில் நோயின் அடிப்படைக் காரணத்தை தீர்க்கும் தன்மை கொண்டது. எனவே, மக்கள் பல மருத்துவ வழிமுறைகளையும் ஆராய்ந்து, தகுந்த நிபுணர்களின் ஆலோசனையுடன் சித்த மருத்துவத்தின் நன்மைகளை பெற வேண்டும்.

ஆங்கில மருத்துவர்கள் மக்களிடம் நேர்மையாக நடந்துகொள்வது அவசியம். ‘முழு குணம்’ என தவறாக கூறுவதற்கு பதிலாக உண்மையை விளக்குவது தான் உண்மையான மருத்துவ சேவை.

இலங்கையின் அரசாங்க சித்த, ஆயுர்வேத மற்றும் யூனானி மருத்துவமனைகள், ஆர்த்திரைட்டிஸ் (arthritis) போன்ற வாத நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவதுடன் இம் மருத்துவமனைகள் பாரம்பரிய சிகிச்சை முறைகளின் மூலம் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சைகளை வழங்குகின்றன.

பொரளை தேசிய ஆயுர்வேத வைத்தியசாலை, கைதடி மற்றும் கோணேசபுரியில் அமைந்துள்ள சித்த போதனா வைத்தியசாலைகள், கம்பஹா விக்கிரமராச்சி ஆயுர்வேத போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலை, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலை, கப்பல்துறை ஆதார வைத்தியசாலை, மன்னார், வவுனியா, கிளிநொச்சி தள வைத்தியசாலை, மாதம்பே ஆதார மருத்துவமனை, மஞ்சந்தொடுவாய் மற்றும் நிந்தவூரில் அமைந்துள்ள யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி மருத்துவமனை, கொடிகாமம், பண்டத்தரிப்பு கிராமிய வைத்தியசாலை மேலும் பல.

இவற்றுக்கு மேலதிகமாக அனைத்து பிரதேச சபைகளின் கீழே இயங்கும் இலவச சுதேச மருத்துவமனைகளினூடாக பொதுமக்கள் துல்லியமான சேவைகளை இலவசமாக பெற முடிந்தாலும் போதியளவு விழிப்புணர்வு இல்லாமையினால் பொதுமக்கள் இவற்றை அனுபவிக்கவில்லை என்றே கூறமுடியும்.

இலங்கையில் சித்த மருத்துவ முறையில் புற சிகிச்சைகளாக பல்வேறு பரிசோதிக்கப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட முறைகள் உள்ளன. அவையாவன,

1.தொக்கனம் (Thokkanam) – தாவர எண்ணெய்களால் செய்யப்படும். வாத நோய்கள், தசை வலிகள் மற்றும் மூட்டு வலிகளை குறைக்க உதவுகிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உடல் சக்தி சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது.

2.ஒற்றடம் (Ottradam) – வெப்ப சிகிச்சை. இது வெப்பம் மூலம் செய்யப்படும் சிகிச்சை முறையாகும். இது மூட்டு வலிகளை குறைத்து, தசை வலிகளை நீக்க உதவுகிறது .

3.பற்று (Pattru) – வெவ்வேறு தாவரங்களின் தூள்களை சேர்த்து தயாரிக்கும். வாத நோய்களை குறைக்கும் திறன் கொண்டது. இது மூட்டு வலிகளை நீக்குவதில் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

4.வர்மம் (Varmam) – புள்ளி சிகிச்சை இது சித்த மருத்துவத்தில் முக்கியமான புற சிகிச்சையாகும். மூட்டு வலிகள் மற்றும் நரம்பு தொடர்பான பிரச்சினைகளை குறைக்க, குறிப்பாக Shoulder pain போன்றவற்றை சிகிச்சை செய்ய உதவுகிறது .

5.பூச்சு (Poochu) – தடவுதல் தாவரங்களின் திரவங்களை நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதியில் தடவுவதன் மூலம், வாத நோய்களை குறைக்க உதவுகிறது.

போன்ற பல்வேறு சித்த சிகிச்சை முறைகளை உதாரணமாகக் குறிப்பிடலாம்

இலங்கையில் பலர், குறிப்பாக ஆர்த்திரைட்டிஸ் போன்ற நீண்டகால வலி மற்றும் மூட்டு பிரச்சினைகள் உள்ளவர்கள், சித்த மருத்துவம் பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லாததால், உடனடி சிகிச்சை தேடும் எண்ணத்தால் ஆங்கில மருத்துவத்தை (Western Medicine) நாடி செல்லுகின்றனர். இதனால் நோய் நிலை மேலும் மோசமடையக்கூடும். ஆதலால் இலங்கையின் அனைத்து பாகங்களிலும் உள்ள அரச சுதேச மருத்துவமனைகளினூடாக சிறந்த சேவையை இலவசமாக பெற்று பூரண குணமடையமுடியும்.

தொகுப்பு : வாதநோயியல் அபிவிருத்திப் பிரிவு, அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கம்.

Related Posts

பள்ளங்கண்டல் ஆலயத்திற்கு செல்லும் பாதையைத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு ரிஷாட் கோரிக்கை!

by selvan
July 6, 2026
0

மன்னார் பிரதேசத்திலிருந்து மறிச்சிகட்டி பூக்குளம் ஊடாக பள்ளங்கண்டல் ஆலயத்திற்கு செல்லும் பாதையை வழிபாடுகளுக்காக திறக்க பக்தர்களின் நலன் கருதி திறந்து கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை...

நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் – பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு!

by selvan
July 6, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்றும், இன்றும் இடம்பெற்ற கொடூர வன்முறைச் சம்பவங்களில் 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 22 கைதிகள் உட்பட குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும்,...

மண்டைதீவு கிரிக்கெட் மைதானம் போன்று நெடுந்தீவு எரிபொருள் நிரப்பு நிலையமும் ஏமாற்றமளிக்கக் கூடாது – ஈ.பி.டி.பி. வலியுறுத்தல்!

மண்டைதீவு கிரிக்கெட் மைதானம் போன்று நெடுந்தீவு எரிபொருள் நிரப்பு நிலையமும் ஏமாற்றமளிக்கக் கூடாது – ஈ.பி.டி.பி. வலியுறுத்தல்!

by selvan
July 6, 2026
0

நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள ஈ.பி.டி.பி, கட்டுமானப் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு திட்டமிடப்பட்டிருப்பது போன்ற 3 மாத காலப் பகுதியில், எரிபொருள் நிரப்பு...

சாவகச்சேரி உப தவிசாளரை பதவி நீக்கம் செய்தமை செல்லுபடியாகும் – தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!

சாவகச்சேரி உப தவிசாளரை பதவி நீக்கம் செய்தமை செல்லுபடியாகும் – தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!

by selvan
July 6, 2026
0

சாவகச்சேரி பிரதேச சபையின் உப தவிசாளரை, ஆளுநரின் தனிநபர் விசாரணைக் குழுவின் தீர்மானத்துக்கு அமைய பதவி நீக்கியமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இடைக்காலத் தடை உத்தரவு...

சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு தொலைக்காட்சி அன்பளிப்பு

by selvan
July 6, 2026
0

சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு, பிரஜைகள் சாசனம் (Citizen Charter) மற்றும் அரச சேவைகள் தொடர்பான விழிப்புணர்வுத் தகவல்களை இலகுவாகக் கொண்டு சேர்க்கும் நோக்கில்...

அம்பாறையில் மீன் வரத்து அதிகரித்தும் மீன்களின் விலை உயர்வு!

by selvan
July 6, 2026
0

அம்பாறை மாவட்டத்தின் கடற்பரப்புகளில் மீன் பிடிபாடு கணிசமாக அதிகரித்துள்ள போதிலும் சந்தைகளில் கடல் மீன்களின் விலைகள் மீண்டும் உயர்வடைந்து காணப்படுவதாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்....

சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தவர்களின் முழுப் பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும் – சஞ்சீவ எதிரிமான்ன வலியுறுத்தல்!

by selvan
July 6, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் முழுப் பொறுப்பையும் தற்போதைய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு ஏற்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற...

அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லும் பாதையை விடுவிக்கக் கோரி முள்ளிக்குளத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லும் பாதையை விடுவிக்கக் கோரி முள்ளிக்குளத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

by selvan
July 6, 2026
0

முள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து மறிச்சிக்கட்டி பூக்குளம் ஊடாக பள்ள கண்டல் அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லும் பாதையை வழிபாடுகளுக்காக திறந்து விடக்கோரி முள்ளிக்குளம் மக்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை...

மூன்று வாகனங்கள் மோதி கோர விபத்து.!

மூன்று வாகனங்கள் மோதி கோர விபத்து.!

by Mathavi
July 6, 2026
0

யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஏ9 பிரதான வீதியின் நுணாவில் பகுதியில் நேற்று (05) மாலை சுமார் 7.30 மணியளவில் பாரவூர்தி, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகிய மூன்று...

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
July 6, 2026
0

அநுராதபுரம் - மதவாச்சி, பிஹிம்பியகொல்லேவ பொலிஸ் பிரிவின் சியம்பலாகஸ்வெவ பகுதியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (5) மாலை காட்டு யானை தாக்கியதில், ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி