ஆவா குழுவின் தலைவன் சன்னாவின் அண்ணாவான சர்மி என்பவர் நேற்றையதினம் 250 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
எனினும் குறித்த நபரை தண்டனையிலிருந்து விடுவிப்பதற்காக மானிப்பாய் பொலிஸார் அவரிடமிருந்து கோடி ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்று விட்டு மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளே கைப்பற்றப்பட்டதாக வழக்குப் பதிவு செய்துள்ளதுடன் சந்தேக நபரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மானிப்பாய் ஓ.ஐ.சி மற்றும் இதனுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது பொலிஸ் உயரதிகாரிகள் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன், இவர்கள் அடித்தட்டு மக்களாக இருந்தவர்கள் எனினும் தற்போது பல கோடி பெறுமதியான வீடுகள், கடைகள், வாகனங்கள் என பல சொத்துக்களை இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டே சேர்த்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே இது தொடர்பிலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இவர்களது சட்டவிரோத சொத்துக்கள் முடக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குற்றத்தை அம்பலப்படுத்துவோம், குற்றமற்ற நாட்டை உருவாக்குவோம்.











