• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 26, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

யுத்தமே நடைபெறாத கொட்­ட­க­லை­யில் 19 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டிருக்கும் ரயில் நிலைய வீதி.!

Mathavi by Mathavi
August 15, 2025
in இலங்கை செய்திகள்.
0
யுத்தமே நடைபெறாத கொட்­ட­க­லை­யில் 19 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டிருக்கும் ரயில் நிலைய வீதி.!
Share on FacebookShare on Twitter

இயற்கை வளங்களாலும் இறைவனின் ஆசீர்வாதத்தாலும் சூழப்பட்ட எமது நாடு 30 வருட யுத்தத்தால் பலவற்றை இழந்தது. இலட்சக்கணக்கான மனித உயிர்கள், அபிவிருத்தி, கல்வி, பொருளாதாரம், சுதந்திரமான மனித செயற்பாடு என பலவற்றை இந்த 3 தசாப்த யுத்தம் இலங்கையர்களிடமிருந்து பறித்தது என்பதை மறுக்க முடியாது. 2009 இல் யுத்தம் மௌனிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் அதனுடைய வடுக்களை இன்றும் இலங்கையர்கள் அனுபவித்து வருகிறார்கள் என்பதற்கு பல சான்றுகள் எம்முன் இருக்கின்றன.

குறிப்பாக யுத்தம் இடம்பெற்ற மாகாணத்தில் பல ஆயிரம் பேர் தங்களது அவயவங்களை இழந்து ஒவ்வொரு வினாடியையும் கடத்துவதில் பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள். அதேபோல் வீடு வாசல்களை இழந்து சொத்துக்களை இழந்த மக்கள் தமது பொருளாதார – வாழ்வாதார தேவைகளுக்காக பெரும் போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். பெண்களை தலைமையாக கொண்ட பல குடும்பங்கள் நாளாந்த செலவை சமாளிக்க பெரும் துயரங்களை அனுபவித்து வருகிறார்கள்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுடைய சோகக் கதைகள் நீண்டு செல்லும் அதேவேளை, மறுபக்கம் யுத்த காலத்தில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த பல வீதிகள் மெல்ல மெல்ல மக்களுடைய பாவனைகளுக்கு விடுவிக்கப்பட்டு வந்தாலும் பெருமளவான காணிகள் – வீதிகள் தொடர்ந்தும் யுத்த கால சூழலை நினைவுபடுத்துவதாக தொடர்ந்தும் இருப்பது மக்களின் உணர்வுகளுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும், புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர், யுத்தம் நடைபெற்ற பகுதியான வடக்கு, கிழக்கு மாகாணத்தில் 40 வருடங்களாக மூடப்பட்டிருந்த வீதிகள் சில மீளத் திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டிருப்பது வரவேற்கக்கூடியது என்றாலும்,

யுத்தமே நடைபெறாத நம் நாட்டின் மலையக பகுதியில் 19 வருடங்களுக்கு மேலாக ஒரு வீதி மூடப்பட்டிருப்பது எம் கவனத்துக்கு வந்திருக்கிறது.

ஆம், கொட்­ட­கலை நக­ரத்­தி­லி­ருந்து ரயில் நிலையம் செல்லும் பாதை­யா­னது எரிங்டன், ஸ்டோ­னிக்­கிளிப் 3 தோட்­டங்­க­ளுக்கும் மற்றும் மேபில்ட் வழி­யா­கவும், போகா­வத்தை வழி­யாக நாவ­லப்­பிட்டி நக­ரத்­திற்கும் செல்­லும் வீதியே இவ்வாறு 19 ஆண்டுளுக்­கு மேலாக மூடப்­பட்­டி­ருப்­பதால் குறி­ப்­பிட்ட தோட்­டங்­க­ளுக்கும் பிர­தே­சங்­க­ளுக்குச் செல்வோர் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வரு­கின்­ற­னர்.

இப்­பாதை செல்லும் வழியில் எரி­பொருள் சேகரிப்பு நிலையம் ஒன்று அமைந்திருப்பதால் குறித்த எரிபொருள் சேகரிப்பு நிலையத்தின் பாதுகாப்புக்காக 19 வரு­டங்­க­ளுக்கு மேலாக குறித்த பாதை மூடப்பட்டு பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு வருகிறது.

நாட்டில் பல பாரி­ய எரி­பொருள் சேகரிப்பு நிலையங்கள் காணப்­படும் வீதிகள் தற்­போது வரை திறந்து மக்கள் பாவ­னையில் உள்­ளமை காணக்கூடியதாக கொட்டகலை மக்கள் தெரிவிக்கின்றனர். இவ் வீதி மூடப்பட்டுள்ளமையினால் பாட­சாலை மாண­வர்கள் அன்­றாட தொழி­லுக்குச் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு மத்­தியில் மாற்று வீதி­யி­னூடாக பயணம் செய்­கின்­­றனர்.

மேலும் கொட்­ட­கலை ரயில் நிலை­யத்­திற்கு கொட்டகலை நக­ரத்­தி­லி­ருந்து செல்­வ­தாக இருந்தால் 2–3 கிலோ மீற்றர் சுற்றி தான் ரயில் நிலையம் செல்ல வேண்­டு­மெ­ன மக்கள் விசனம் தெரி­விக்­கின்­றனர். குறித்த மூடப்­பட்­டி­ருக்கும் வீதியினை திறந்தால் நகரத்திலிருந்து 300 மீற்றர் தூரத்­தி­லேயே ரயில் நிலையம் செல்ல முடி­யு­மெ­னவும் அம்­ மக்கள் தெரிவிக்கின்றனர்.

யுத்தம் நடந்த பகுதிகளில் மூடப்பட்டிருந்த பல வீதிகள் இன்று திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில், யுத்தமே நடைபெறாத ஒரு பகுதியில் அமைந்துள்ள வீதி, யுத்தம் நிறைவடைந்து 16 வருடங்கள் கடந்தும் ஏன் திறக்கப்படாமல் இருக்கிறது என அப்பிரதேச மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் கொட்­ட­கலை நகரத்திலிருந்து ரயில் நிலையம் மற்றும் எரிங்டன், ஸ்டோ­னிக்­கிளி்ப், போகா­வத்தை செல்லும் வீதி­யினை திறந்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்­கின்­ற­னர்.

Related Posts

சிவாஜி அண்ணன் குறித்து அர்ச்சுனா தேவையற்ற விடயங்களை பேசினால் நடப்பது வேறு.!

சிவாஜி அண்ணன் குறித்து அர்ச்சுனா தேவையற்ற விடயங்களை பேசினால் நடப்பது வேறு.!

by Mathavi
May 26, 2026
0

சிவாஜிலிங்கத்தை விமர்சிப்பதற்கு இந்த மண்ணில் யாருக்கும் அருகதை இல்லை. புலம்பெயர் தமிழர்கள் சிவாஜி அண்ணனுக்கு நிதி அனுப்புவதால் தனக்கு நிதி கிடைக்காமல் போய்விடும் என்ற பொறாமையிலேயே நாடாளுமன்ற...

தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றும் ஏழு ஊழியர்கள் கைது.!

போதைப்பொருட்களுடன் பல்கலைக்கழக மாணவர்கள் கைது.!

by Mathavi
May 26, 2026
0

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் திடீர் சோதனையின் போது, போதைப்பொருட்களுடன் பல்கலைக்கழக ஒழுக்காற்று பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் 23 வயதுடையவர்கள் எனவும்,...

பாசையூரில் காணி உரித்து ஆவணங்கள் இல்லாத மக்களுக்கு உறுதிகள் வழங்கப்படல் வேண்டும்.!

பாசையூரில் காணி உரித்து ஆவணங்கள் இல்லாத மக்களுக்கு உறுதிகள் வழங்கப்படல் வேண்டும்.!

by Mathavi
May 26, 2026
0

கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பாசையூரில் வாழ்ந்துவரும் மக்களுக்கு அவர்களது காணிகளுக்கான உரித்து ஆவணங்கள் வழங்கப்படவில்லை. அதனால் அவர்கள் பெரும் பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். அவர்களுக்கான...

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு.!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு.!

by Mathavi
May 26, 2026
0

மட்டக்களப்பு குருக்கள்மடம் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு இன்றையதினம் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கானது எதிர்வரும் ஜுன் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது....

போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை; ஒரே நாளில் 734 பேர் சிக்கினார்கள்.!

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய ஆறு பேர் கைது.!

by Mathavi
May 26, 2026
0

அரநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மோராகம்மன பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 37 முதல் 62 வயதுக்கு இடைப்பட்ட...

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!

by Mathavi
May 26, 2026
0

மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக தனியார் பேருந்து ஒன்றும் சிறிய ரக பாரவூர்தி ஒன்றும் இன்று செவ்வாய்க்கிழமை (26) நேருக்கு...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொ*லை.!

நீரில் மூழ்கி ஆசிரியர் ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 26, 2026
0

கிரிந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிந்த கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் படல்கும்பர பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஆசிரியர் என தெரியவந்துள்ளது....

சிறப்பாக இடம்பெற்ற செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய திருவிழா.!

சிறப்பாக இடம்பெற்ற செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலய திருவிழா.!

by Mathavi
May 26, 2026
0

யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வரலாற்று சிறப்புமிக்க புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ, மக்கள் வெள்ளத்தில் மிகச் சிறப்பாக பக்திப்...

கொள்ளையில் ஈடுபட்ட இருவருக்கு விளக்கமறியல்.!

கொள்ளையில் ஈடுபட்ட இருவருக்கு விளக்கமறியல்.!

by Mathavi
May 26, 2026
0

சாமிமலை பகுதியில் உள்ள கவரவலை தோட்ட பி பிரிவில் கடந்த 22 ஆம் திகதி வீட்டார் மஸ்கெலியா கிறிஸ்தவ தேவாலயத்திற்கு வழிபட சென்ற வேளையில் கவரவலை ஏ...

சங்கு கலைக்கழகத்தின் ‘அக்கினிக் குஞ்சு’ நாடக ஆற்றுகை ஒரு பார்வை.!

சங்கு கலைக்கழகத்தின் ‘அக்கினிக் குஞ்சு’ நாடக ஆற்றுகை ஒரு பார்வை.!

by Mathavi
May 26, 2026
0

மலையக மக்களின் வாழ்வியல், கலாச்சாரம் மற்றும் அவர்களின் இருப்புக்கான போராட்டங்களை நவீன அழகியலோடு மேடையேற்றும் ஒரு உன்னத முயற்சியாக, சங்கு கலைக்கழகத்தின் தயாரிப்பில் உருவான ‘அக்கினிக்குஞ்சு’ மேடை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி