நேற்றுமுன்தினம் (06) முதல் காணாமல் போன மூன்று குழந்தைகளின் தந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட புரவுன்லோ தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த வேலு மருதமுத்து வயது 55 உடையவர் நேற்று காலை 10.57 மணி முதல் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றவர் இன்னும் வீடு திரும்பவில்லை என்று அவரது மகன் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளார்.
அதனைத் தொடர்ந்து மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தில் இன்று (08) மாஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார வேண்டுகோளின்படி கொழும்பு தலைமையக கடற்படை சுழி மோசடிகள் 8 பேர் மற்றும் ஹட்டன் பொலிஸ் நிலைய மோப்பநாய், அதன் அதிகாரிகள் இன்று மதியம் வருகை தந்து பல மணி நேரம் தேடி மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் புரவுன்லோ வட்டாரத்தில் உள்ள நீர்த்தேக்கத்தில் இருந்து சடலத்தை மீட்டு எடுத்தனர்.
உடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
இதற்கான முழுமையான பொறுப்பை வட்டாரத்திற்கு பொறுப்பான சார்ஜன் வீ.பேரின்பநாயகம், ஜீ .விக்னேஸ்வரா ஜா மேற்கொண்டு வந்தனர்.










