1995
ஈழப்போர்: இலங்கை, வாழைச்சேனையில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் கிழக்கிலங்கை இராணுவத் தளபதி நளின் அங்கம்மன கொல்லப்பட்டார்.
1811
மெக்சிக்கோ விடுதலைப் போரின் தலைவர் மிகுவேல் இடால்கோ காஸ்டில்லா எசுப்பானியரினால் மெக்சிக்கோவில் தூக்கிலிடப்பட்டார்.
1865
அமெரிக்காவின் பிரதர் ஜொனத்தன் என்ற நீராவிக் கப்பல் கலிபோர்னியாவில் மூழ்கியதில் 225 பயணிகள் உயிரிழந்தனர்.
1866
அமெரிக்காவின் லூசியானா, நியூ ஓர்லென்ஸ் நகரில் இடம்பெற்ற கலவரங்களில் 48 பேர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.
1871
நியூயோர்க்கில் இஸ்ட்டேட்டன் தீவில் வெசுட்ஃபீல்டு என்ற கப்பல் வெடித்ததில் 85 பேர் உயிரிழந்தனர்.
1912
ஜப்பானியப் பேரரசர் மெய்ஜி இறந்தார். அவரது மகன் யொசிகீட்டோ பேரசராக முடிசூடினார்.
1930
மொண்டேவீடியோ நகரில் நடைபெற்ற முதலாவது உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் உருகுவை அணி அர்கெந்தீனா அணியை 4-2 கணக்கில் தோற்கடித்து முதலாவது உலகக்கோப்பையை வென்றது.
1932
கலிபோர்னியாவில் 10ஆவது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.
1945
இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பல் ஐ-58 அமெரிக்காவின் இந்தியானாபொலிசு என்ற கடற்படைக் கப்பலை மூழ்கடித்ததில் 883 கடற்படையினர் உயிரிழந்தனர்.
1962
திரான்சு – கனடிய நெடுஞ்சாலை, உலகின் மிக நீண்ட தேசிய நெடுஞ்சாலை, அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
1966
இங்கிலாந்து அணி மேற்கு ஜேர்மனியை 4-2 என்ற கணக்கில் வென்று காற்பந்து உலகக்கோப்பையை வென்றது.
1969
வியட்நாம் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் தென் வியட்நாம் சென்று அங்கு அரசுத்தலைவர் நியூவென் வான் தியூவை சந்தித்தார்.
1971
அப்பல்லோ திட்டம்: அப்பல்லோ 15 விண்கலத்தில் சென்ற டேவிட் ஸ்காட், யேம்சு எர்வினனாகியோர் பால்க்கன் என்ற தரையுலவியுடன் நிலாவில் இறங்கினர்.
1971
ஜப்பானில் இரண்டு விமானங்கள் வானில் மோதியதில் 162 பேர் உயிரிழந்தனர்.
1980
பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றிடம் இருந்து வனுவாட்டு விடுதலை பெற்றது.
1981
கம்யூனிசப் போலந்தில் உணவுப் பற்றாக்குறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 50,000 பேர் லோட்ஸ் நகரில் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டனர்.
1997
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் “திரெட்போ” என்ற இடத்தில் இடம்பெற்ற மண்சரிவில் 18 பேர் உயிரிழந்தனர்.
2012
ஆந்திரப் பிரதேசம், நெல்லூரில் தமிழ்நாடு விரைவுவண்டி தீப்பிடித்ததில் 32 பயணிகள் உயிரிழந்தனர், 27 பேர் காயமடைந்தனர்.
2012
டெல்லியில் மின்வெட்டு ஏற்பட்டதில் 300 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
















