கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களால் பாடசாலை வளாகத்தில் இருந்த திருநாவுக்கரசர் சிலை உடைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நாயனார் குருபூஜை நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றிருந்த நிலையில் இரவு மேற்படி சிலை உடைக்கப்பட்டிருப்பதாக பாடசாலை சமூகத்தினரால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் இதே சிலை இனந்தெரியாதோரால் சேதப்படுத்தப்பட்டு பாடசாலை நிர்வாகத்தினரால் புனரமைப்புச் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் உடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Related Posts
தவிசாளரின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு விவகாரம்; ஊடகவியலாளர் பாலநாதன் சதீசனிடம் தீவிர விசாரணை.!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு ஊடகங்களில் வெளியானமை தொடர்பில், ஊடகவியலாளர் பாலநாதன் சதீசனிடம் முல்லைத்தீவு பொலிஸார் நேற்றையதினம் (29) மீண்டும்...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையில், பெருமளவிலான 'குஷ்' போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
ஹட்டன் ஸ்ரீ நிக்கோதாராமய விகாரையில் விசேட நிகழ்வு.!
2570 வருடத்தை யொட்டியும் வெசாக் பௌர்ணமி தினத்தன்று இன்று காலை முதல் சம் புத்த பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதன்போது அங்கு ஸ்ரீ நிக்கோதாராமய விகாரையின்...
சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!
நெல்லியடி - பருத்தித்துறை பிரதான வீதியில், ரூபின்ஸ் வைத்தியசாலைக்கு அருகில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக...
சத்திர சிகிச்சைக்கு உதவி கோரும் முன்னாள் போராளிகளை கொச்சைப்படுத்தாதீர்கள்.!
"சத்திர சிகிச்சைக்காக உதவி கோரும் முன்னாள் போராளிகளுக்கு உங்களால் உதவ முடியாவிட்டாலும், தயவுசெய்து அவர்களைக் கொச்சைப்படுத்தி உபத்திரம் செய்யாதீர்கள்" என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய...
தமிழ் இனப் படுகொ*லை எங்கும் இடம்பெறவில்லை.!
"இலங்கையில் எக்காலத்திலும், எந்தவொரு இடத்திலும் எவ்விதமான தமிழ் இனப்படுகொலையும் இடம்பெறவில்லை என்பதில் சர்வஜன அதிகாரம் கட்சி மிக உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றது. அண்மைக்காலமாக வடக்கில் இவ்வாறான கருத்துகள்...
புயலுக்கும் அசையாத பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குவதே இலக்கு.!
"தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தது எப்படியாவது ஐந்து வருட காலத்தைக் கடந்து செல்வதற்காக அல்ல. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்படக்கூடிய எந்தவொரு பொருளாதார நெருக்கடிக்கும் வலுவாக முகம் கொடுத்து...
சமூக ஊடகத் தகவல்களை கண்மூடித்தனமாக நம்பாதீர்.!
"சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்களின் உண்மைத்தன்மையையும், அதன் பின்னணியையும் தீர்க்கமாக ஆராய்ந்த பின்னரே அவற்றுக்கு விருப்பம் தெரிவிக்கவோ அல்லது பகிரவோ வேண்டும். சமூக ஊடகங்களில் வரும் அனைத்தையும்...
சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!
மஹபாகே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடுபல வீதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (29) வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படை அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டபோது பெருமளவிலான சட்டவிரோத...
கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு.!
யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில், வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது...










