• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 26, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தமிழினப் படு கொ*லை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலை உறுதி செய்யுங்கள்..! 

admin by admin
June 24, 2025
in இலங்கை செய்திகள்.
0
தமிழினப் படு கொ*லை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலை உறுதி செய்யுங்கள்..! 
Share on FacebookShare on Twitter

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதானது இனமேலாதிக்கம் மிகுந்திருக்கும் இலங்கைத் தீவில் சாத்தியமற்றது என்பதால், பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் வகையிலான சர்வதேச விசாரணைக்கு வழி செய்யுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரியுள்ளார்.

இன்று (24) மாலை கொழும்பில் நடைபெற்ற, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளருடனான சந்திப்பின் போதே அவர் இவ்விடயத்தைக் வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 47 உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், திருமலை மாவட்ட ஆயர் இம்மானுவல், வணபிதா ஆம்ஸ்ரோங் அடிகளார், சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்டோரின் கையொப்பங்களுடன் அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்ட விடயங்களை மேற்கோள் காட்டி தனது கோரிக்கையை முன்வைத்த சிறீதரன் எழுத்துமூல கோரிக்கை ஒன்றையும் ஆணையாளரிடம் நேரில் சென்று கையளித்துள்ளார்.

அந்தக் கோரிக்கைக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து, அடுத்தடுத்து ஆட்சிபீடம் ஏறிய அனைத்து அரசாங்கங்களும் சிங்கள – பௌத்த பெரும்பான்மைவாதத்தை நிறுவனமயமாக்கி, ஈழத்தமிழர்களின் அடையாளத்துவ வாழ்வை சிதைத்து, சுயாட்சி மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அடியோடு இல்லாமல் செய்தன. இதற்காக நீண்டகாலம் ஈழத்தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட அமைதியான ஜனநாயக எதிர்ப்பு போராட்டங்கள் கொடூரமாக அடக்கப்பட்ட பின்னர், ஆயுத மோதல் ஏற்பட்டிருந்ததடன், அதன் உச்சமாக 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை என்ற இனப் பேரவலம் நிகழ்ந்திருந்தது.

போருக்குப் பின்னரும் தமிழர் தாயகப் பகுதிகள் பெரிதும் இராணுவமயமாக்கப்பட்டு, நில அபகரிப்புகள், மக்கள் தொகை மறுசீரமைப்பு, பொருளாதார புறக்கணிப்பு மற்றும் கலாச்சார அழிப்பு என்பவை தமிழ்த் தேசியத்தை அழிப்பதற்கான ஆயுதங்களாக அரசாலும், அரச படைகளாலும் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போதைய ஆட்சியின் கீழும், இந்த அடக்குமுறை நடவடிக்கைகளை நிறுத்தவோ அல்லது மாற்றியமைக்கவோ புதிய அரசாங்கம் எந்த அர்த்தமுள்ள நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

மனித உரிமைகள் பேரவையின் 30/1 (2015) மற்றும் 46/1 (2021) தீர்மானங்கள் உள்ளிட்ட தொடர்ச்சியான தீர்மானங்களை ஏற்றுக் கொண்டாலும், அவை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளையும், செய்யப்பட்ட குற்றங்களின் வீரியத்தையும் ஈடு செய்யத்தக்கவையல்ல என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். அதேவேளை இலங்கை அரசு OHCHR இன் OSLAP திட்டத்தை தடையின்றி அணுகுவதைத் தொடர்ந்து மறுத்து வருகிறது. இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிப்பதற்கான சர்வதேச முயற்சிகளையும் தடுக்கின்றது.

இத்தகைய உள்ளக அரசியல் நிலைமாறுதல்களை கடந்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது தீர்மானங்களுக்கு அப்பால் நகர்ந்து, தமிழினப் படுகொலை விவகாரத்தை ஐ.நா பொதுச் சபைக்கும், ஐ.நா பாதுகாப்பு பேரவைக்கும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் கொண்டு செல்லும் தெளிவான குறிக்கோளுடன் கூடிய சர்வதேச நீதிப் பொறிமுறை ஒன்றை செயற்படுத்த வேண்டுமென தங்களை தயவோடு கேட்டுக் கொள்கிறேன்.

நீதிக்கான பாதைகளை திறப்பதில் ஏற்படும் தாமதம், இலங்கை அரசுக்கும் தமிழினப் படுகொலையாளிகளுக்கும் தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கான தைரியத்தை அதிகரிக்கும். அதேநேரத்தில் ஈழத் தமிழர்கள் தங்கள் தாயகத்தில் அழிக்கப்படுவதையும் துரிதப்படுத்தும் என்ற அடிப்படையில் நீதி, உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பவை தாமதிக்கப்படாதிருப்பதை தங்கள் கொள்கை ரீதியான தலைமைத்துவம் உறுதிசெய்ய வேண்டும்” என்றுள்ளது.

Related Posts

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!

by Mathavi
June 26, 2026
0

பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு...

வலி. வடக்கில் காணி விடுவிப்புக் கோரி தொடரும் போராட்டம்.!

வலி. வடக்கில் காணி விடுவிப்புக் கோரி தொடரும் போராட்டம்.!

by Mathavi
June 26, 2026
0

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக பத்தாவது நாளாக...

சரித் அபேசிங்கவை கட்சியிலிருந்து நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி.!

சரித் அபேசிங்கவை கட்சியிலிருந்து நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி.!

by Mathavi
June 26, 2026
0

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு ஒன்றின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, ஹொரனை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் விபரம் மற்றும் அவர் வகித்த...

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு.!

விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு.!

by Mathavi
June 26, 2026
0

ஹங்வெல்ல, எம்புல்கம - பனாகொட வீதியில் எம்புல்கம தேவாலயத்திற்கு அருகில் நேற்று வியாழக்கிழமை (25) அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து...

வெவ்வேறு இடங்களில் கோடாவுடனும் மதுபானத்துடனும் மூவர் சிக்கினர்.!

கோடாவுடன் இருவர் கைது.!

by Mathavi
June 26, 2026
0

கஹவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலகமவத்த பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு வைக்கபட்டிருந்த கோடாவுடன் நேற்று வியாழக்கிழமை (25) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கஹவத்தை பகுதியயை சேர்ந்த...

குளத்தில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு.!

குளத்தில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு.!

by Mathavi
June 26, 2026
0

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்விளான் கிராம அலுவலர் பிரிவின் கல்விளாற்குளத்திற்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை (25) பிற்பகல் 3.00 மணியளவில் தூண்டிலில் மீன்பிடிக்கச்...

புதிய செயற்கை கால் தயாரிப்பு திட்டத்தின் ஆரம்ப விழா.!

புதிய செயற்கை கால் தயாரிப்பு திட்டத்தின் ஆரம்ப விழா.!

by Mathavi
June 26, 2026
0

அவயவங்களை இழந்த எமது மக்கள் முடங்கி போகாமல், அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, அவர்களின் வழமையான செயல்பாடுகளுக்கு உதவும் ஜெய்ப்பூர் நிறுவனம் தனது சேவைகளை முற்றிலும் இலவசமாக வழங்குவது எமது...

அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு தொடர்பில் முழுமையாக அரசாங்கத்தை மட்டும் விமர்சிக்க முடியாது.!

அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு தொடர்பில் முழுமையாக அரசாங்கத்தை மட்டும் விமர்சிக்க முடியாது.!

by Mathavi
June 26, 2026
0

அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு தொடர்பில் முழுமையாக அரசாங்கத்தை மட்டும் விமர்சிக்க முடியாது. உலகளாவிய நெருக்கடியும் இதற்கு ஒரு காரணமாகும் என தேசிய மக்கள் முன்னணியின் ஸ்தாபகரும் நாபீர்...

போசாக்கு விழிப்புணர்வு நடைபவனியும், கண்காட்சியும்.!

போசாக்கு விழிப்புணர்வு நடைபவனியும், கண்காட்சியும்.!

by Mathavi
June 26, 2026
0

போசாக்கு மாதத்தை முன்னிட்டு கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட போசாக்கு விழிப்புணர்வு நடைபவனியும், போசாக்கு விழிப்புணர்வு கண்காட்சியும் இன்றையதினம் நெல்லியடியில் இடம்பெற்றது. நெல்லியடி...

அகரவத்தை – லொனக் பிரதான பாதையை புனரமைக்குமாறு கோரிக்கை.!

அகரவத்தை – லொனக் பிரதான பாதையை புனரமைக்குமாறு கோரிக்கை.!

by Mathavi
June 26, 2026
0

அகரவத்தை தொடக்கம் லொனக் வரை சுமார் 4 கிலோமீற்றர் நீளமுள்ள பிரதான பாதை தற்போது மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இப்பாதையை நம்பி வாழும் சுமார் 750...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி