• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 25, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

இந்தியாவுடன் அநுர அரசு செய்த இரகசிய ஒப்பந்தங்கள் என்ன?- சஜித் அணி பகிரங்கக் கேள்வி

admin by admin
June 8, 2025
in இலங்கை செய்திகள்., முக்கிய செய்திகள்
0
இந்தியாவுடன் அநுர அரசு செய்த இரகசிய ஒப்பந்தங்கள் என்ன?- சஜித் அணி பகிரங்கக் கேள்வி
Share on FacebookShare on Twitter

“இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு இன்னும் நாடாளுமன்றத்துக்கோ, நாட்டுக்கோ தெரியப்படுத்தவில்லை. அவ்வாறெனில் அரசு செய்யக் கூடாத ஒன்றைச் செய்துள்ளதா? தெரிந்தோ தெரியாமலோ எமது தாய் நாடு காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதா?”

  • இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா கேள்வி எழுப்பினார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இந்தியாவுடன் எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன? அவற்றின் உள்ளடக்கங்கள் எவ்வாறானவை? அவற்றுக்குச் சட்டமா அதிபரின் அனுமதி கிடைக்கப் பெற்றதா? அல்லது அமைச்சரவை அனுமதி கிடைத்ததா? அவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதா என்பது தொடர்பில் நாம் தொடர்ச்சியாகக் கேள்விகளை முன்வைத்தோம்.

கடந்த வாரம் பிரதமரிடம் இது குறித்து கேள்வி எழுப்பினோம். ஆனால், பிரதமருக்குப் பதிலாக சபை முதல்வர் எழுந்து தம்வசம் தகவல்கள் இல்லை என்றும், அதற்குச் சற்று கால அவகாசம் வேண்டும் என்றும் கூறினார்.

நாட்டில் பரவலான பேசுபொருளாக அமைந்த இந்த விவகாரம் தொடர்பில் தம்மிடம் தகவல் இல்லை என சபை முதல்வர் கூறுவது புதுமையாகவுள்ளது.

பிறிதொரு நாட்டுடன் செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பினாலும், எழுப்பாவிட்டாலும் அவை தொடர்பான புரிதல்கள் அமைச்சர்களுக்கு இருக்க வேண்டும்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக இந்த ஒப்பந்தங்களின் பிரதிகளை ஜனாதிபதி செயலகத்திடம் கோரிய போது, தம்வசம் அவை இல்லை என்ற பதிலே வழங்கப்பட்டது.

எதற்காக இது குறித்த தகவல்கள் மறைக்கப்படுகின்றன? எமது கேள்விக்குப் பதிலளிப்பதற்கான சந்தர்ப்பம் இருந்தும் பிரதமர் ஏன் அதனை புறக்கணிக்கின்றார்? அவ்வாறெனில் அரசு செய்யக் கூடாத ஒன்றைச் செய்துள்ளதா? தெரிந்தோ தெரியாமலோ எமது தாய் நாடு காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளதா?

பாராளுமன்றத்தில் இந்த ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து, அவை குறித்த விவாதங்களை நிறைவுக்கு கொண்டு வர முடியுமல்லவா? ஆனால் அதற்கான தைரியம் அரசாங்கத்துக்கு இல்லை.

நாடாளுமன்றத்தில் பல சந்தர்ப்பங்களில் நாம் இது குறித்து கேள்வி எழுப்பியிருக்கின்றோம். நாடாளுமன்றத்தில் மாத்திரமின்றி பொதுமக்களும் இது தொடர்பில் கேள்வி எழுப்புகின்றனர் என்பதை அரசும் அறியும். மறைக்கக் கூடியவாறான உள்ளடக்கங்கள் இந்த ஒப்பந்தங்களில் காணப்படுகின்றமை கவலைக்குரியதாகும்.

323 கொள்கலன்கள் விவகாரத்திலும் அரசு இவ்வாறுதான் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அனைத்து விடயங்களிலும் தலையிடும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்த விடயத்தில் அமைதியாகவுள்ளார்.

அறிக்கையைத் தயாரித்துக் கொண்டிருப்பதாகவும், அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை காத்திருக்குமாறும் கூறுகின்றனர். ஆனால், அந்த அறிக்கையைத் தயாரிப்பது சுயாதீன குழு அல்ல.

அரசின் அமைச்சர்களே அந்தக் குழுவில் உள்ளனர். அவர்கள் தமக்கு ஏற்றால்போல் அதனைத் தயாரித்துக்கொள்வர். எனவே, அதில் கூறப்படும் விடயங்களை முழுமையாக ஏற்க முடியாது.” – என்றார்.

Related Posts

ஆசிரியர் சேவை வெள்ளிவிழா: சிகரம் நிறுவன ஆலோசகர் திருமதி வில்வராசா உதயஸ்ரீ பாராட்டி கௌரவிப்பு.!

ஆசிரியர் சேவை வெள்ளிவிழா: சிகரம் நிறுவன ஆலோசகர் திருமதி வில்வராசா உதயஸ்ரீ பாராட்டி கௌரவிப்பு.!

by Mathavi
May 24, 2026
0

சிகரம் நிறுவனத்தின் சிரேஷ்ட ஆலோசகரும், கைவேலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆசிரியையுமான திருமதி வில்வராசா உதயஸ்ரீ அவர்களின் 25 வருட ஆசிரியர் சேவை வெள்ளிவிழா பாராட்டு...

வடக்கில் தமிழ்த் தேசிய அரசியல் எனும் போர்வையில் சுயநலம் பேணும் தலைவர்களிடம் ஏமாறாதீர்கள்.!

வடக்கில் தமிழ்த் தேசிய அரசியல் எனும் போர்வையில் சுயநலம் பேணும் தலைவர்களிடம் ஏமாறாதீர்கள்.!

by Mathavi
May 24, 2026
0

கடந்த காலங்களில் தமிழ்த் தேசிய அரசியல் என்ற போர்வையில் மக்களை உணர்ச்சிவசப்பட வைத்து, வாக்குகளைப் பெற்றுத் தங்களது சுயநல அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்ட ஏமாற்று அரசியல்வாதிகளின்...

யாழில் நான்கு மாத ஆண் குழந்தை உயிரிழப்பு.!

யாழில் நான்கு மாத ஆண் குழந்தை உயிரிழப்பு.!

by Mathavi
May 24, 2026
0

யாழில் பிறந்து 4 மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்று இன்றையதினம் உயிரிழந்துள்ளது. வரணி - இயற்றாலை பகுதியைச் சேர்ந்த தவகுமார் பஸ்மிலன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது....

முல்லைத்தீவில் விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் வழி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்.!

முல்லைத்தீவில் விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் வழி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்.!

by Mathavi
May 24, 2026
0

அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய வெளி மாகாணத்தைச் சேர்ந்த தனியார் பேருந்தின் வழி அனுமதிப்பத்திரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடக்கு...

வட்டிக்குப் பணம் வழங்கும் வர்த்தகர் சுட்டுக் கொ*லை; இருவர் கைது.!

துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொ*லை செய்ய உதவிய இருவர் கைது.!

by Mathavi
May 24, 2026
0

துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் ஒருவரைக் கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்கிய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களை வலான ஊழல் ஒழிப்பு பிரிவினர் நேற்று (23) கைது...

சரத் பொன்சேகா கூறியுள்ள விசித்திரமான கருத்துக்கள் தொடர்பில் எங்களுக்கு எதுவும் தெரியாது.!

சரத் பொன்சேகா கூறியுள்ள விசித்திரமான கருத்துக்கள் தொடர்பில் எங்களுக்கு எதுவும் தெரியாது.!

by Mathavi
May 24, 2026
0

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலம் மற்றும் அது புதைக்கப்பட்ட இடம் தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள...

நாட்டின் உண்மையான பொருளாதார நிலவரத்தை 220 இலட்சம் மக்களும் விளங்கிக்கொள்ள வேண்டும்.!

நாட்டின் உண்மையான பொருளாதார நிலவரத்தை 220 இலட்சம் மக்களும் விளங்கிக்கொள்ள வேண்டும்.!

by Mathavi
May 24, 2026
0

நாட்டில் தற்சமயம் நிலவி வரும் உண்மையான பொருளாதார நிலவரங்கள், டொலர் கையிருப்பின் எதார்த்தம் மற்றும் வருங்காலக் கடன் சவால்கள் குறித்து நாட்டின் 220 இலட்சம் குடிமக்களும் விழிப்போடு...

கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை; பெண் ஒருவர் கைது.!

கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை; பெண் ஒருவர் கைது.!

by Mathavi
May 24, 2026
0

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள முதலைக்குடா பகுதியிலுள்ள வீடு மற்றும் அந்த பகுதியில் உள்ள களப்பு பகுதியில் (வாவியில்) சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையங்களை...

அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை கொண்டு சென்ற ஒருவர் கைது.!

அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை கொண்டு சென்ற ஒருவர் கைது.!

by Mathavi
May 24, 2026
0

கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் பகுதியில் இருந்து பாரவூர்தி ஒன்றின் மூலம் அனுமதிப்பத்திரம் எதுவும் இன்றி 22 கால்நடைகளை நேற்று இரவு கொண்டு சென்ற போது...

மஸ்கெலியா புனித சூசையப்பர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலி.!

மஸ்கெலியா புனித சூசையப்பர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலி.!

by Mathavi
May 24, 2026
0

மஸ்கெலியா புனித சூசையப்பர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலி இன்று 24 ஆம் திகதி காலை அருட்தந்தை டொமினிக் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இன்றைய தினம் திருவிழா...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி