• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 25, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மாணவியின் உயிர்மாய்ப்பை அநுர அரசு அலட்சியப்படுத்துவதன் நோக்கம் என்ன?

Mathavi by Mathavi
May 9, 2025
in இலங்கை செய்திகள்.
0
மாணவியின் உயிர்மாய்ப்பை அநுர அரசு அலட்சியப்படுத்துவதன் நோக்கம் என்ன?
Share on FacebookShare on Twitter

“பாடசாலை மாணவியின் உயிர்மாய்ப்புடன் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மத்திய அமைப்பாளரின் பெயர் குறிப்பிடப்படுகின்றது. இவரைப் பாதுகாப்பதற்கு அநுர அரசு இந்த விடயத்தை அலட்சியப்படுத்துகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. மாணவியின் உளவியல் தொடர்பில் மருத்துவ அதிகாரிகள் சங்கம் எவ்வாறு அறிக்கை சமர்ப்பிக்க முடியும்.?” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ‘அ’ அட்டவணையின் ஒழுங்குவிதிகளின் கீழ் இறக்குமதித் தீர்வைக் கட்டணங்கள் தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே நாமல் எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“மக்களுக்குப் பல போலியான வாக்குறுதிகள் மற்றும் பொய்களைக் குறிப்பிட்டு ஆட்சியமைத்த அரசு இன்று திண்டாடுகின்றது. தேர்தல் காலத்தில் நாம் பொய்யுரைக்கவில்லை. இயலுமானதையே குறிப்பிட்டோம். சவால்களுக்கு மத்தியில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். எமக்கு வாக்களித்த மக்களுக்கு எமது நன்றிகள். அரசியலில் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளோம்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளில் உளவியல் ரீதியான பாதிப்புக்களினால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு தற் கொ லை செய்யும் நிலை காணப்படுகின்றது.

அண்மையில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பகிடிவதையால் பாதிக்கப்பட்டு தற் கொ லை செய்துகொண்டார். மக்கள் விடுதலை முன்னணிக்குப் பகிடிவதை தொடர்பில் புதிதாக எதையும் குறிப்பிடத் தேவையில்லை.

அவர்கள் பகிடிவதைகள் தொடர்பில் ஏனையவர்களுக்கு பாடம் கற்பிப்பார்கள். ஏனெனில், பல்கலைக்கழகங்களில் பகிடிவதையின் கர்த்தாக்கள் அவர்கள்தான். தமது அரசியல் தேவைக்காகப் பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகளை வன்முறையாக மாற்றியமைத்தார்கள்.

கொழும்பில் பாடசாலை மாணவி ஒருவர் தற் கொ லை செய்துகொண்ட விடயம் தற்போது பிரதான பேசுபொருளாகியுள்ளது. எமது சக உறுப்பினர் மனோ கணேசன் அந்த மாணவி தொடர்பில் இங்கு பேசினார். அந்த விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் பதிலளித்தார்.

இந்த மாணவியின் உளவியல் தொடர்பில் மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார். மருத்துவ அதிகாரிகள் சங்கம் எவ்வாறு உளவியல் பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்க முடியும்? இதனை எம்மால் விளங்கிக்கொள்ள முடியவில்லை.

இந்தச் சம்பவத்துடன் தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மத்திய அமைப்பாளரின் பெயர் குறிப்பிடப்படுகின்றது. இந்த விவகாரத்தில் அவரைப் பாதுகாப்பதற்காக அநுர அரசு கவனம் செலுத்தாது அலட்சியப்படுத்துகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. இதனை அரசியலாக்க வேண்டிய தேவை எதிர்க்கட்சிகளுக்குக் கிடையாது. உயிரிழந்த மாணவிக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுங்கள். அதை விடுத்து பேசுபொருளாக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தாதீர்கள்.

ஓரிரு நாட்களுக்கு முன்னர் கல்கிஸையில் 19 வயது இளைஞன் பகல் வேளையில் பிரதான வீதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகையில், ‘இந்த இளைஞனின் தாயார் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றார். அதனால்தான் இந்தக் கொ லை இடம்பெற்றுள்ளது’ – என்று கூறினார்.

இவ்வாறு எப்படிக் கூற முடியும்? முறையான விசாரணைகள் நடந்ததன் பின்னரா இவ்வாறு அவர் குறிப்பிட்டார்? தாய் போதைப்பொருள் வியாபாரி என்றால் அந்த இளைஞன் ஏன் இளம் வயதில் வீதிகளைத் துப்பரவு செய்ய வேண்டும்? அவர் கோடீஸ்வரராக அல்லவா இருந்திருப்பார்? பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் கருத்து இந்தக் கொலையை நியாயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

போதைப்பொருளுடன் தொடர்புபட்டிருந்தாலும் நடுவீதியில் வைத்து சுட்டுக் கொல்ல முடியுமா? தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாடம் கற்பிப்பதாகக் கூறிக்கொண்டு வந்தவர்களுக்கு இன்று தனிமனித பாதுகாப்பு தொடர்பில் கூறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.” – என்றார்.

Related Posts

தெல்தெனிய கொ*லை சம்பவம்; சந்தேகநபரின் திடுக்கிடும் வாக்குமூலம்.!

தெல்தெனிய கொ*லை சம்பவம்; சந்தேகநபரின் திடுக்கிடும் வாக்குமூலம்.!

by Mathavi
June 25, 2026
0

கண்டி, தெல்தெனியவில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அம்பாறை வைத்தியசாலையைச் சேர்ந்த பிசியோதெரபியின் மரணம், கழுத்தை நெரித்ததால் ஏற்பட்ட கொலை என்பது பிரேதப் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு ஜேர்மன் துணைத் தூதுவரிடம் ஊடகவியலாளர்கள் கோரிக்கை.!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு ஜேர்மன் துணைத் தூதுவரிடம் ஊடகவியலாளர்கள் கோரிக்கை.!

by Mathavi
June 25, 2026
0

இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கும், அரசாங்கத்தால் கொண்டுவரப்பட உள்ள ஊடக சாசனத்தை நிறுத்துவதற்கான அழுத்தங்களை வழங்குமாறும் இலங்கைக்கான ஜேர்மன் துணை தூதுவர் சார...

ரகித ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க ஆகியோர் கைது.!

ரகித ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க ஆகியோர் கைது.!

by Mathavi
June 25, 2026
0

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்ச...

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஐந்து மாகாணங்களில் மொட்டுவின் ஆட்சியே.!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஐந்து மாகாணங்களில் மொட்டுவின் ஆட்சியே.!

by Mathavi
June 25, 2026
0

உரிய காலத்தில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தம்மால் வெற்றி பெற முடியும் என்ற பூரண நம்பிக்கை தங்களுக்கு இன்னும் ஏற்படவில்லை...

சுற்றுச்சூழல் என்ற பெயரில் மாகாண சபைகளின் அதிகாரங்களில் மத்திய அரசின் தலையீட்டை ஏற்க முடியாது.!

சுற்றுச்சூழல் என்ற பெயரில் மாகாண சபைகளின் அதிகாரங்களில் மத்திய அரசின் தலையீட்டை ஏற்க முடியாது.!

by Mathavi
June 25, 2026
0

சுற்றுச்சூழல் என்ற பெயரில் மாகாண சபைகளின் அதிகாரங்களில் மத்திய அரசின் தலையீடை ஏற்க முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கல்...

காக்கைதீவு குப்பை மேட்டில் பாரிய தீ விபத்து – சுமார் 200 குடும்பங்கள் பாதிப்பு!

by selvan
June 24, 2026
0

யாழ்ப்பாணம் காக்கைதீவு, கல்லுண்டாய் பகுதியில் அமைந்துள்ள மாநகர சபையின் பிரதான குப்பை மேட்டில்  ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 200 க்கும்...

சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

by selvan
June 24, 2026
0

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம், ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவினால் இன்று (24) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி,...

சாதாரண தர பரீட்சையில் இம்முறை  11,790 பரீட்சாத்திகள் அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தி

இவ்வாண்டு நடைபெற உள்ள பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் இல்லை!

by selvan
June 24, 2026
0

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். எனவே முன்னர்...

தேர்தல்களின் போது அழியா மை பயன்படுத்துவதை தவிர்த்தால் சுமார் 100 மில்லியன் ரூபாய் அரச நிதியைச் சேமிக்க முடியும்!

by selvan
June 24, 2026
0

தேர்தல்களின் போது வாக்களித்ததை உறுதிப்படுத்துவதற்காக விரலில் மை பூசும் முறையை நீக்குவதன் மூலம், ஒரு தேர்தலின் போது சுமார் 100 மில்லியன் ரூபாய் அரச நிதியைச் சேமிக்க...

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம் 103 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம் 103 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

by selvan
June 24, 2026
0

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (24) பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 113 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் கிடைத்தன. இதன்படி,...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி