• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 25, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

என்.பி.பி அரசு சட்டவிரோத கட்டடங்களை சட்டரீதியாக மாற்றும் அபாயம்…!

Mathavi by Mathavi
April 20, 2025
in இலங்கை செய்திகள்.
0
என்.பி.பி அரசு சட்டவிரோத கட்டடங்களை சட்டரீதியாக மாற்றும் அபாயம்…!
Share on FacebookShare on Twitter

என்.பி.பிக்கு வாக்களிப்பதன் மூலம் சட்டவிரோதமான தையிட்டி திஸ்ஸ விகாரையை சட்ட ரீதியான விகாரையாக மாற்றக்கூடிய சூழ்நிலை உள்ளதாக, சங்கு சின்னத்தில் யாழ்ப்பாண மாநகர சபையில் போட்டியிடும் ஐக்கிய தமிழர் ஒன்றியத்தின் வேட்பாளர் திரு.மயூரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், என்.பி.பியின் வருகையால் தமிழ் மக்கள் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. ஏற்கனவே எமது மக்கள் பெருவாரியான வாக்குகளை வழங்கி ஆளும் கட்சியில் 3 எம்.பிகளை தெரிவு செய்து அரசுக்கு வலுவை வழங்கியுள்ளனர். இவ்வாறு இருந்தும் இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு என்ன செய்தது? பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதாக கூறி ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் பயங்கரவாத தடைச் சட்டமானது இன்னமும் நீக்கப்படவில்லை. ஏன் அதனை நீக்கவில்லை?

கடந்த 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஜனாதிபதியின் தலைமையிலான கூட்டத்தில், தமக்கு ஆதரவை வழங்கி தம்மை வலுப்படுத்துமாறும், அவ்வாறு வலுப்படுத்தினால் தான் தாங்கள் வடக்கு, கிழக்கிற்கு அபிவிருத்திகளை செய்ய முடியும் என்று ஜனாதிபதி கூறியிருந்தார். ஏற்கனவே நாங்கள் ஆதரவு வழங்கி 3 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்தோம். அதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?

தையிட்டி விகாரையானது தனியார் நிலத்தில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டடம் ஆகும். அந்த சட்டவிரோத கட்டடத்தை ஏன் இந்த என்.பி.பி அரசாங்கம் இன்னமும் அகற்றவில்லை? மீண்டும் உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும் ஆதரவு வழங்கினால் அவர்கள் உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றி சட்டவிரோத கட்டடங்களை சட்டரீதியான கட்டடங்களாக மாற்றுவதற்கு அனுமதிகளை வழங்குவார்கள். என்.பி.பிக்கு வாக்களித்தால் இன்னும் சிறிது காலத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்த சுவடுகளையே இல்லாமல் ஆக்குவதற்கு இந்த என்.பி.பி அரசாங்கம் வழி வகுக்கும் என்றார்.

Related Posts

குளங்களில் மீன் குஞ்சுகளை விடும் திட்டம் ஆரம்பம்.!

குளங்களில் மீன் குஞ்சுகளை விடும் திட்டம் ஆரம்பம்.!

by Mathavi
May 25, 2026
0

டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் குளங்களில் மீன் குஞ்சுகளை விடும் திட்டத்தின் கீழ் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார...

மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு.!

மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு.!

by Mathavi
May 25, 2026
0

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையிலிருந்து கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன 19 வயது இளைஞனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. கல்முனைக்குடி கடற்பகுதியில் வைத்து தேடுதல்...

அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை வைத்து சுரேஷ் சலே மீது பழி சுமத்துவது அரசியல் சதியே.!

அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை வைத்து சுரேஷ் சலே மீது பழி சுமத்துவது அரசியல் சதியே.!

by Mathavi
May 25, 2026
0

வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானாவின் போலியான வாக்குமூலத்தின் அடிப்படையில், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சுரேஷ் சலே என்று பிரதி சொலிசிட்டர்...

தோட்டத் தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.!

தோட்டத் தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.!

by Mathavi
May 25, 2026
0

பெருந்தோட்டப் பகுதிகளில் அண்மைக் காலமாக தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொண்டு வரும் வீடு மற்றும் காணிப் பிரச்சினைகள் தீவிரமடைந்து வருகின்றன. பல வருடங்களாக தங்களது சொந்தச் செலவில் இலட்சக்கணக்கான...

பொருளாதார நெருக்கடியை தீர்க்கக்கூடிய வரைபடம் உண்டு; பொறுப்பை தந்தால் இந்த நொடியே சாதிப்பேன்.!

பொருளாதார நெருக்கடியை தீர்க்கக்கூடிய வரைபடம் உண்டு; பொறுப்பை தந்தால் இந்த நொடியே சாதிப்பேன்.!

by Mathavi
May 25, 2026
0

முறையான மற்றும் அறிவியல் ரீதியான வேலைத்திட்டம் இன்றி எந்தவொரு பொறுப்பையும் ஏற்பது தவறு என்றும், தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதற்குரிய தெளிவான வரைபடம் தன்னிடம் உள்ளதால் இன்று...

வட்டிக்குப் பணம் வழங்கும் வர்த்தகர் சுட்டுக் கொ*லை; இருவர் கைது.!

தங்க நகைகள் கொள்ளை; இருவர் கைது.!

by Mathavi
May 25, 2026
0

சாமிமலை பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் நேற்று 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவத்தில் 21, 38 வயதுடைய இருவர் மஸ்கெலியா பொலிசாரினால் அதிரடியாக...

செப்டெம்பரில் இந்த ஆட்சியை விரட்ட மாபெரும் மக்கள் போராட்டம் வெடிக்கும்.!

செப்டெம்பரில் இந்த ஆட்சியை விரட்ட மாபெரும் மக்கள் போராட்டம் வெடிக்கும்.!

by Mathavi
May 25, 2026
0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசுக்கு இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகும் எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி, இந்த ஆட்சியை விரட்டியடிப்பதற்கான மாபெரும் மக்கள் போராட்டத்தை நாங்கள் வீதியில் இறங்கி...

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிப்பு.!

by Mathavi
May 25, 2026
0

மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹியங்கனை நகரில் உள்ள பாழடைந்த வீடொன்றுக்கு அருகில் உள்ள வாய்க்காலில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கொண்டு...

முடிந்தால் பசிலை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வாருங்கள்.!

முடிந்தால் பசிலை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வாருங்கள்.!

by Mathavi
May 25, 2026
0

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள பிடியாணை உத்தரவைத் தொடர்ந்து, முடிந்தால் அவரை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற...

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி இடைநிறுத்தம்.!

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி இடைநிறுத்தம்.!

by Mathavi
May 25, 2026
0

அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாக செயற்பட்டு வந்திருந்த ஏ.சி. றிஸ்வானை நீதிச்சேவை ஆணைக்குழு வெள்ளிக்கிழமை (22) முதல் இடைநிறுத்தி உள்ளது. இது தொடர்பான தொலை நகல் அக்கரைப்பற்று நீதிமன்றுக்கு...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி