அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரனியில் திரண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன் வர வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்
இன்று (19-03;2025) கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பதையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
தூய்மையான அரசியலை முன்னெடுத்த ஒருவனாக நான் இருக்கின்றேன் தந்தை செல்வா ஜி ஜி பொன்னம்பலம் தொண்டமான உருவாக்கிய கட்சிதான் தமிழர் விடுதலைக் கூட்டணி
இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை அதற்கான பணமும் எங்களிடம் இல்லை இந்த தேர்தலில் எமது கட்சி போட்டியிடவில்லை
நடைபெற உள்ள தேர்தல் தான் முக்கியமான ஒரு தேர்தலாக அமையும் இப்போது வெளியிடங்களில் இருந்து வந்து கோடிக்கணக்கிலே பணத்தை கொட்டி தீர்த்து இந்த தேர்தலில் போட்டியிடுகின்றார்கள் என்னுடன் பேரம் பேசியதாக கூட சொல்லுகின்றார்கள் என்னிடம் இவ்வாறு தேர்தலில் வீசி எறிய பணம் இல்லை
ஆனால் அரசியலுக்காக இல்லாமல் அனைவருமே ஒன்று திரண்டு ஒரணியிலிருந்து தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்க முன் வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.