• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 25, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு வைபவம் ஆரம்பம்.! (சிறப்பு இணைப்பு)

Mathavi by Mathavi
March 19, 2025
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு வைபவம் ஆரம்பம்.! (சிறப்பு இணைப்பு)
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பொதுப்பட்டமளிப்பு வைபவம் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியது.

மரபார்ந்த பண்பாட்டு அணிவகுப்புடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் பீடாதிபதிகள் அணிவகுத்து வர, கொடி, குடை, ஆலவட்டங்கள் சகிதம் விழா அரங்குக்கு வருகைதந்த துணைவேந்தர் அமர்வுகளுக்குத் தலைமை தாங்கிப் பட்டங்களையும், பரிசில்கள் மற்றும் தகைமைச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

இன்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை 13 அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு வைபவத்தில் மூவாயிரத்து 920 மாணவர்கள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

ADVERTISEMENT

இம்முறை உயர் பட்டப் படிப்புகள் பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம், கலைப்பீடம், பொறியியல் பீடம், விவசாய பீடம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், மருத்துவ பீடம், தொழில்நுட்ப பீடம், இந்துக் கற்கைள் பீடம், சித்த மருத்துவ பீடம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னை நாள் வவுனியா வளாகத்தைச் (தற்போது வவுனியா பல்கலைக்கழகம்) சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞானங்கள் பீடம் மற்றும் தொழில்நுட்பக் கற்கைகள் பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளதுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில், திறந்த மற்றும் தொலைக்கல்வி முறைமை மூலம் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்தவர்ளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்தப் பட்டமளிப்பு விழாவில் 399 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து 686 உள்வாரி மாணவர்களுக்கும், 702 திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலைய மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 133 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

உயர் பட்டப்படிப்புகள் பீடத்தைச் சேர்ந்த 399 மாணவர்கள் உயர் பட்டத் தகைமைகளைப் பெறவுள்ளனர். அவர்களில் கலாநிதிப் பட்டத்தை நான்கு மாணவர்களும், முது மெய்யியல்மாணிப் பட்டத்தை 11 மாணவர்களும், தமிழில் முதுமாணிப்பட்டத்தை 22 மாணவர்களும், சைவசித்தாந்தத்தில் முதுமாணிப்பட்டத்தை மூன்று மாணவர்களும், கிறிஸ்தவக் கற்கைகளில் முதுமாணிப்பட்டத்தை 38 மாணவர்களும், தூய சக்தித் தொழில்நுட்பங்களில் முதுமாணிப் பட்டத்தை ஒரு மாணவரும், கல்வியியலில் முதுமாணிப்பட்டத்தை 176 மாணவர்களும், பொது நிர்வாகத்தில் முதுமாணிப்பட்டத்தை 70 மாணவர்களும், கல்வியில் பட்டப்பின் தகைமைச் சான்றிதழை 54 மாணவர்களும், பிராந்தியத் திட்டமிடலில் முதுமாணிப்பட்டத்தை 17 மாணவர்களும், தமிழில் பட்டப்பின் தகைமைச் சான்றிதழை ஒரு மாணவரும் பெறவிருப்பதுடன் வியாபார நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தை இரண்டு மாணவர்களும் பெறுகின்றனர்.

மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 147 மாணவர்கள் மருத்துவமாணி சத்திரசிகிச்சைமாணிப் பட்டத்தையும், பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 177 மாணவர்கள் பொறியியலில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், விவசாய பீடத்தைச் சேர்ந்த 110 மாணவர்கள் விவசாயத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த 84 மாணவர்கள் பொறியியலில் சிறப்பு தொழில்நுட்பமாணிப் பட்டத்தையும், 91 மாணவர்கள் உயிர்முறைமைகளில் சிறப்பு தொழில்நுட்பமாணிப் பட்டத்தையும், சித்தமருத்துவ பீடத்தில் இருந்து 60 மாணவர்கள் சித்த மருத்துவ சத்திரசிகிச்சைமாணிப் பட்டத்தையும் பெறவுள்ளனர்.

இவர்களுடன், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடத்தில் இருந்து மருந்தகவியல் சிறப்புமாணிப் பட்டத்தை 39 மாணவர்களும், மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தை 52 மாணவர்களும், தாதியியலில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தை 38 மாணவர்களும் பெறவிருக்கின்றனர்.

அத்துடன், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் இருந்து சிறப்பு வியாபார நிர்வாகமாணிப் பட்டத்தை 267 மாணவர்களும், வியாபார நிர்வாகமாணிப் (பொது) பட்டத்தை 13 மாணவர்களும், சிறப்பு வணிகமாணிப் பட்டத்தை 83 மாணவர்களும், வணிகமாணிப் (பொது) பட்டத்தை மூன்று மாணவர்களும் பெறவிருக்கின்றனர்.

இவர்களுடன், கலைப்பீடத்தில் இருந்து சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை 276 மாணவர்களும், பொதுக் கலைமாணிப் பட்டத்தை 353 மாணவர்களும், மொழிபெயர்ப்புக் கற்கைகளில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தை 22 மாணவர்களும், சட்டமாணியில் சிறப்புப் பட்டத்தை 69 மாணவர்களும் பெறவிருக்கின்றனர்.

மேலும், சேர். பொன் இராமநாதன் ஆற்றுகைகள், காண்பியக் கலைகள் பீடத்தைச் சேர்ந்த 158 மாணவர்கள் நடனம், இசை மற்றும் சித்திரமும் வடிவமைப்பும் துறைகளில் நுண்கலைமாணிப் பட்டத்தையும் பெறவிருக்கின்றனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னைய வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 36 மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 30 மாணவர்கள் கணனி விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், 57 மாணவர்கள் சுற்றுச் சூழல் விஞ்ஞானத்தில் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமாணிப் பட்டத்தை இரண்டு மாணவர்களும், தகவல் தொழில்நுட்பத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்தை 106 மாணவர்களும், பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் விஞ்ஞானமாணி பட்டத்தை 56 மாணவர்களும் பெறவிருக்கின்றனர்.

வியாபாரக் கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த 57 மாணவர்கள் கணக்கியலும், நிதியியலிலும் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 13 மாணவர்கள் வியாபாரப் பொருளியலில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 32 மாணவர்கள் மனிதவள முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 12 மாணவர்கள் சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், 34 மாணவர்கள் வியாபார முகாமைத்துவமாணி (பொது)ப்பட்டத்தையும், 67 மாணவர்கள் செயற்றிட்ட முகாமைத்துவத்தில் சிறப்பு வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும், ஒன்பது மாணவர்கள் செயற்றிட்ட முகாமைத்துவத்தில் வியாபார முகாமைத்துவமாணி பட்டத்தையும் பெறவிருக்கின்றனர்.

இவர்களுடன், தொழில்நுட்பக் கற்கைகள் பீடத்தில் இருந்து 110 மாணவர்கள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் இளமாணி சிறப்புப் பட்டத்தையும் பெறுகின்றனர்.

பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் தொலைதூரக் கற்கைகள் முறைமை மூலம் பட்டக் கற்கைகளைப் பூர்த்தி செய்த 514 மாணவர்கள் கலைமாணி பட்டத்தையும், 76 மாணவர்கள் சிறப்பு வணிகமாணிப் பட்டத்தையும், 26 மாணவர்கள் வணிகமாணிப்பட்டத்தையும், 86 மாணவர்கள் வியாபார முகாமைத்துவமாணிப் பட்டத்தையும் பெறவுள்ளதுடன், 90 மாணவர்கள் உடற்கல்வியில் உயர் தகைமைச் சான்றிதழ்களையும், 37 மாணவர்கள் தொழில்சார் ஆங்கிலத்தில் தகைமைச் சான்றிதழ்களையும், பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் உயர் தகைமைச் சான்றிதழை ஒரு மாணவரும், வியாபார முகாமைத்துவத்தில் மூன்று மாணவர்கள் உயர் தகைமைச் சான்றிதழ்களையும், வணிகத்தில் தகைமைச் சான்றிதழை ஒரு மாணவரும் பெற இருப்பதுடன், வியாபார முகாமைத்துவத்தில் தகைமைச் சான்றிதழை ஒரு மாணவரும் பெறுவது உறுதிப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், சகல பட்டக் கற்கைநெறிகளுக்குமாக 68 தங்கப் பதக்கங்களும், 57 பரிசில்களும், நான்கு புலமைப்பரிசில்களும், வழங்கப்படவுள்ளன.

Thinakaran
406 716.7K
  • Videos
  • Playlists
  • நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
    நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி! 1 day ago
  • சற்றுமுன் வவுனியாவில் பெருமளவான ஆயுதங்களுடன் இருவர் கைது.!
    சற்றுமுன் வவுனியாவில் பெருமளவான ஆயுதங்களுடன் இருவர் கைது.! 2 days ago
  • புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம்
    புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம் 2 days ago
  • 393 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      போலியான கடவுச்சீட்டுகளைப் பெற்ற இருவர் கைது..!

      போலியான கடவுச்சீட்டுகளைப் பெற்ற இருவர் கைது..!

      by Thamil
      May 24, 2025
      0

      குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் தவறான தகவல்களை சமர்ப்பித்து வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைப் பெற்ற சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு மற்றும்...

      ஆரம்பமாகவுள்ள திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த பெருந்திருவிழா..!

      ஆரம்பமாகவுள்ள திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த பெருந்திருவிழா..!

      by Thamil
      May 24, 2025
      0

      வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை உபயகாரர்களுக்கான காளாஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற...

      அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிச் சென்ற மூன்று பாரவூர்திகளுடன் மூவர் கைது..!

      அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிச் சென்ற மூன்று பாரவூர்திகளுடன் மூவர் கைது..!

      by Thamil
      May 24, 2025
      0

      அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிச் சென்ற மூன்று பாரவூர்திகள் இன்றைய தினம் (24) மடக்கிப் பிடிக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ்...

      யாழில் நிமோனியா காய்ச்சல் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழப்பு..!

      யாழில் நிமோனியா காய்ச்சல் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழப்பு..!

      by Thamil
      May 24, 2025
      0

      யாழில் நேற்றைய தினம் (23) நிமோனியா காய்ச்சல் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாலி தெற்கு, வசாவிளான் பகுதியைச் சேர்ந்த கா.கிட்டுணன் (வயது 75) என்ற முதியவரே...

      புதுக்குடியிருப்பு கலைவாணி கலை மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட இலவச குடிநீர் விநியோகத் திட்டம்..!

      புதுக்குடியிருப்பு கலைவாணி கலை மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட இலவச குடிநீர் விநியோகத் திட்டம்..!

      by Thamil
      May 24, 2025
      0

      புதுக்குடியிருப்பு கலைவாணி கலை மன்றத்தினால் முன்னெடுக்கப்படும் சமுக பணிகளில் ஒன்றான "அனைவருக்கும் சுத்தமான குடிநீர் " என்னும் எண்ணக்கருவிற்கு அமைய மன்றத்தினால் இலவச குடிநீர் விநியோக திட்டம்...

      ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களால் நடத்தப்பட்ட நடைபவனி..!

      ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களால் நடத்தப்பட்ட நடைபவனி..!

      by Thamil
      May 24, 2025
      0

      ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் 109 வது வருட நிறைவை முன்னிட்டும், பழைய மாணவர் அமைப்புக்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டி சீசன் 03 ஐ முன்னிட்டும் இன்று சனிக்கிழமை...

      அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை ; விற்பனையாளர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்..!

      அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை ; விற்பனையாளர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்..!

      by Thamil
      May 24, 2025
      0

      தவலந்தென்ன பகுதியில் அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் ஒன்றை விற்ற விற்பனையாளருக்கு ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொத்மலை, தவலந்தென்னாவைச் சுற்றியுள்ள...

      நல்லூரில் உருவாக்கப்பட்ட உணவகம் தொடர்பில் வட மாகாண ஆளுநரிடம் மனு கையளிப்பு..!

      நல்லூரில் உருவாக்கப்பட்ட உணவகம் தொடர்பில் வட மாகாண ஆளுநரிடம் மனு கையளிப்பு..!

      by Thamil
      May 24, 2025
      0

      நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சூழலில் உருவாக்கப்பட்ட உணவகம் தொடர்பில் நடவடிக்கை எடுக்காத யாழ். மாநகர சபையின் செயற்பாடு தொடர்பில் விசாரணைக் குழு ஒன்றை அமைக்குமாறு தமிழ்ச் சைவப்...

      வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை..!

      வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை..!

      by Thamil
      May 24, 2025
      0

      பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, கொழும்பு முதல் புத்தளம் மற்றும் மன்னார் முதல் காங்கேசன்துறை வரையிலான...

      Load More
      Next Post
      இராமநாதன் அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்றில் விதிக்கப்பட்ட தடை.!

      இராமநாதன் அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்றில் விதிக்கப்பட்ட தடை.!

      கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல்.! (சிறப்பு இணைப்பு)

      கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல்.! (சிறப்பு இணைப்பு)

      தினகரன் இணையம் மீது அடக்குமுறை பாய்ந்தது.! (ஆதாரங்கள் இணைப்பு)

      தினகரன் இணையம் மீது அடக்குமுறை பாய்ந்தது.! (ஆதாரங்கள் இணைப்பு)

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி