யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று தெற்கு செம்பியன் விளையாட்டு கழகத்தினர் மஹா சிவராத்திரியை சிறப்பிக்கும் முகமாக நடாத்திய இரவு கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த 14/03/2025 அன்று அதன் தலைவர் சே.டிலக்சன் தலமையில் இரவு 8:00. மணியளவில் ஆரம்பமான போட்டிகளில் 15 கழகங்கள் பங்குபற்றியிருந்தன.
இப் போட்டிகளில் வெற்றிக் கிண்ணத்தை அம்மன் ping pong A அணியினர் தன்வசப்படுத்தினர்.
இப் போட்டிகளை பார்வையிடுவதற்கு வடமராட்சி கிழக்கின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விளையாட்டு வீரர்கள், ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.




