சிங்கப்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்தில் பணிபுரியும் இரு விமானப் பணிப்பெண்களை பாலி யல் ரீதியாக துன்புறுத்த முயன்ற பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டவர் ஆவார்.
சந்தேக நபர் நேற்று (15) இரவு 10.00 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். வருகையின் போது, சந்தேக நபர் அதிக குடிபோதையில் விமானத்தில் பணிபுரியும் இரண்டு விமான பணிப்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றுள்ளார்.
எனவே, விமானப் பணிப்பெண்கள் இருவரும் சம்பவம் குறித்து விமானனியிடம் தெரிவித்ததையடுத்து, அவர் குறித்து கட்டுநாயக்க விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விமானம் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரையிறங்கியதும் இலங்கை குற்றப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்து கட்டுநாயக்க பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக விமானப் பணிப்பெண்கள் இருவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பயணி நீர்கொழும்பு சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்பட்டதும் அவர் அதிகளவில் குடிபோதையில் இருந்தமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இலங்கையின் வான்பரப்பில் இடம்பெற்றுள்ளதால், சந்தேகநபர் இன்று (16) கொழும்பு இல.01 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.