இலங்கை தமிழரசுக்கட்சியில் இதுவரை இணைந்து அரசியலில் பயணித்த முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன தலைமையிலான அணி இம்முறை தமிழ்மக்கள் கூட்டணியின் சின்னமான மான் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பாலச்சந்திரன் மேலும் தெரிவிக்கையில்,
இதுவரை காலமும் தமக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் காரைநகரின் அபிவிருத்திக்காக தம்முடன் கைகோப்பார்கள் என தான் பலமாகநம்புவதாகவும், பிரதேசசபையின் இறுதி 7 மாதங்கள் தான் தவிசாளராக இருந்து பல அதிரடி அபிவிருத்திகளை இனங்கண்டு செயற்படுத்தியமையை தம்மக்கள் மறக்கமாட்டார்கள் என தாம் திடமாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார் .
முன்னாள் முதலமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான திரு.விக்கினேஸ்வரன் அவர்களை தாம் பலமாக நம்புவதோடு அவரது கட்சியினரின் சட்டப்புலமையை பயன்படுத்தி எதிர்கால காரைநகரின் நிலையான அபிவிருத்திக்கு முறையான திட்டங்களை வகுத்து செயற்படுத்த எண்ணியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.