அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர் ஒருவரை நேற்று (10) மாலை இனந்தெரியாத நபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி துஷ் – பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்திற்கு முகங்கொடுத்த வைத்தியர் 32 வயதானவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் தனது கடமைகளை முடித்துக் கொண்டு, அரசாங்கம் வைத்தியர்களுக்கு வழங்கிய தங்குமிடத்திற்குச் சென்ற அவருக்கு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டித்தும், துஷ் – பிரயோகம் செய்த நபரை உடனடியாக கைது செய்யுமாறு கோரியும் அநுராதபுரம் வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
4 total views , 1 views today