கம்பஹா – கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வல்பிட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை (07) மாலை உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வல்பிட்ட பகுதியில் வசிக்கும் 49 வயதுடையவர் ஆவார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொட்டதெனியாவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டதெனியாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.