ஹெரோயின் போதைப்பொருளை முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்றதாக கூறப்படும் பெண் உட்பட இருவர் நேற்று வியாழக்கிழமை(06) கஸ்கிஸ்ஸை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரத்மலானை பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய பெண்ணும் 37 வயதுடைய ஆணுமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கஸ்கிஸ்ஸை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கஸ்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 67 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கஸ்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.