மருதங்கேணி பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் இன்று(7) வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மருதங்கேணி சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி சங்கத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தலைமையில் இன்று காலை 10.00 மணியளவில் நிகழ்வு ஆரம்பமானது.
ADVERTISEMENT
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி விருந்தினராக கலந்து கொண்டதுடன் புதிய நிர்வாக தெரிவையும் ஆரம்பித்துவைத்தார்.
இந்நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேசங்களில் உள்ள சமுர்த்தி பயனாளிகள் அதிகளவானோர் கலந்து கொண்டனர்.


