வடமராட்சி கிழக்கு யா/ செம்பியன்பற்று அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்லமெய்வல்லுனர் போட்டி இன்று(6) இடம்பெற்றது.
பிற்பகல் 1.30 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.சுப்பிரமணியம் கணேஸ்வரன் தலைமையில் விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது
அஞ்சல் ஓட்டம்,நெடுந்தூர ஓட்டங்கள்,குறுந்தூர ஓட்டங்கள்,பழைய மாணவர் மற்றும் பெற்றோர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன
விளையாட்டில் வெற்றிபெற்ற மாணவர் மற்றும் பெற்றோர்களுக்கு பரிசில்கள் மற்றும் வெற்றிக் கேடயங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டன
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமராட்சி வலயக்கல்வி அலுவலகத்தின் கணக்காளர் திரு. இராஜலிங்கம் தனரூபன் அவர்களும்
சிறப்பு விருந்தினராக கரவெட்டி பிரதேச செயலகத்தின் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு சண்முகபாஸ்கரன் சந்திரகுமார் அவர்களும் ஏனைய விருந்தினர்களாக அயல்பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்களும் பார்வையாளர்களாக பழைய மாணவர்கள்,பெற்றோர்களென பலரும் கலந்து கொண்டனர்.



