ஹாலி எல – பண்டாரவளை வீதியில் இன்று (22) பிற்பகல் முச்சக்கர வண்டியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் ஹாலி எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹாலி எல நகரத்திலிருந்து பண்டாரவளை வீதியில் முச்சக்கர வண்டி சென்று கொண்டிருந்தபோது, முச்சக்கர வண்டியின் பின்புறத்தில் திடீரென தீப்பிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அதே நேரத்தில், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒன்று கூடி அதன் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளனர்.
தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்துள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ADVERTISEMENT