இன்று 06.03.2025 அன்று நாடாளுமன்றில் நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் நடைபெற்ற சுகாதார அமைச்சு மற்றும் ஊடகங்கள் தொடர்பான விடயதானத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை –
தமிழில்
கௌரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே!
இன்று இந்த அவையின் மறைந்த முன்னாள் உறுப்பினர் மாமனிதர் சிவநேசனின் 17வது ஆண்டு நினைவு நாளாகும். மாமனிதர் சிவனேசன் அவர்கள் கிளைமோர் தாக்குதல் மூலம் இராணுவத்தினரால் கொல்லப்பட்டார். அவருக்கு எனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊடக அமைச்சு குறித்தும் நாங்கள் விவாதித்து வருகிறோம். தமிழ் ஊடக உலகம் இரண்டு தனித்துவமானவர்களை இழந்துள்ளது. தினக்குரல் நிறுவனர் திரு. எஸ்.பி. சாமி மற்றும் தினக்குரல் ஞாயிறு பதிப்பின் ஆசிரியராகவும் பின்னர் வீரகேசரி பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றிய திரு.பாரதி இராசநாயகம் ஆகியோருக்கும் எனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கௌரவ அமைச்சர் அவர்களே!
யாழ்ப்பாண போதனா போதனா மருத்துவமனையின் பணிப்பாளரால் கடிதம் ஒன்று எனக்கு வழங்கப்பட்டது. அந்தக் கடிதத்தை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவிடமும் அவர் சமர்ப்பித்திருந்தார். நான் அதன் பிரதியை உங்களுக்கு வழங்குவேன். அந்தக் கடிதம் மிகவும் விரிவான கடிதமாகும். அதில் ஆளணி மதிப்பாய்வு மற்றும் பல்வேறு தரவுகள் உள்ளன. அந்த விடயத்துக்குள் செல்வதற்கு போதிய நேரம் இல்லாததால் நான் அந்த விடயத்துக்குள் செல்லவில்லை.
இக்கடிதத்தின் மூலம் பணிப்பாளர் உள்கட்டமைப்பு மேம்பாட்டைக் கேட்கிறார். குறிப்பாக அவர் ஒரு புதிய மகப்பேறு பிரிவு, இருதயவியல் இருதய மார்பு பிரிவு. உள்ளிட்ட மேம்பட்ட சிகிச்சைகளுக்கான சிறப்பு பிரிவு மற்றும் 30 க்கும் மேற்பட்ட சிகிச்சை உள்கட்டமைப்பு வசதிகள் தேவை என்று தெரிவித்துள்ளார். இதில் குறிப்பிட்ட நான்கு விடயங்களில் ஒரு விடயம் தொடர்பாக உங்கள் விசேட கவனத்தை ஈர்க்க விரும்புகின்றேன்.
கௌரவ அமைச்சரே!
யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் உள்ள மகப்பேறு விடுதி 2012 இல் பாழடைந்தமையால் அழிக்கப்பட்டது. அதன் பின்னர் நான்கு விடுதிகளுக்குரிய இடத்தில் 16 விடுதிகள் இப்போது செயல்பட்டு வருகின்றன. நீங்கள் அந்த அலகுக்குச் சென்றால், தாய்மார்கள் தரையில் தூங்கும் ஒரு பயங்கரமான சூழ்நிலையை அவதானிக்கலாம். முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத இடத்தில் தற்போதைய விடுதி உள்ளது.. பெரிய அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னர் ICU இல் பராமரிக்கப்படும் தங்கள் குழந்தைகளுக்கு பாலுூட்டுவதற்கு தாய்மார்கள் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் நடந்து செல்லவேண்டும். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
இந்த விடயத்துக்கு நீங்கள் முன்னுரிமையளிக்க வேண்டும். இந்த விடயங்களை அவதானித்து மகப்பேற்று விடுதி தொடர்பாக உடனடியாக செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
யாழ்ப்பாண போதனா மருத்துவமனை நாட்டின் நான்காவது தேசிய மருத்துவமனையாக உள்ள நிலையில், அதனை விரிவாக்குவதற்கு பணிப்பாளரால் நிலவசதி கேட்கப்பட்டுள்ளது.. மீனாட்சி அம்மன் வீதியில் உள்ள யாழ்ப்பாண போதனா மருத்துவமனைக்கு சொந்தமான இந்த நிலம் தற்போது பாதுகாப்புப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் அந்த நிலத்தை மருத்துவமனைக்குத் திருப்பித் தருமாறு கேட்கிறார். மணிக்கூண்டுக் கோபுர வீதியில் அமைந்துள்ள கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான நிலத்தையும் அவர் கேட்டுள்ளார். எனவே இவை தொடர்பாக நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
கௌரவ அமைச்சரே,
இரண்டாவது முக்கியமாக பிரச்சினையாக குறிப்பிட விரும்புவது தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனை பற்றியதாகும். தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவின் பணியாளர்களைக் கொண்டிருந்தாலும், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் போதனா மருத்துவமனையின் கீழ் வரும் புற்றுநோய் பிரிவு ஆகிய இரண்டும் அடிப்படையில் வெவ்வேறானவை. எனவே அங்குள்ள மருத்துவர்கள் தங்கள் சேவைகளை பயனுள்ளதாக வழங்குவதற்குரிய பரிந்துரைகளை எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் கூற்றுப்படி புற்றுநோய் பிரிவு சேவைகளை நிர்வகிப்பதற்கென தனி பணிப்பாளர் மற்றும் கணக்காளர் தனி மேட்ரன் தேவையென எதிர்பார்க்கிறார்கள். புற்றுநோய் சேவைகளை நிர்வகிக்கும் அனைத்து ஊழியர்களும் ஒரே நிர்வாகத்தின் கீழ் இருக்க வேண்டும். நிதியுதவி தொடர்பாக அவர்கள் கேட்பதும் இதுதான். புற்றுநோய் சேவைகளுக்கு தனித்தனி நிதி ஒதுக்கீடு அவசியமாகும். ஆதார வைத்தியசாலை மற்றும் போதனா மருத்துவமனை இரண்டுக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. எனவே அவர்களுக்கு தனியாக நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.
மருத்துவமனையில் உள்ள ஆதரவு சேவைகளைப் பொறுத்தவரை, உயர் தர அடிப்படையில் தற்போதுள்ள ஆளணி வெற்றிடங்களை நிரப்ப வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். நோயியல் நிபுணர் மற்றும் ஆலோசகர், இரத்தவியலாளர்கள் பணியிடங்களுக்கான வெற்றிடங்களை வருடாந்த இடமாற்றத்தின் மூலம் நிரப்ப வேண்டும். புற்றுநோய் மருத்துவமனைக்கு CT ஸ்கேன் இயந்திரத்தை வழங்க வேண்டும் என்று அவர்கள் மன்றாடுகிறார்கள். CT ஸ்கேனர் இல்லாத புற்றுநோய் மருத்துவமனை எப்படி புற்றுநோய் மருத்துவமனையாக இருக்க முடியும் என்று எனக்குப் புரியவில்லை. எனவே கௌரவ அமைச்சரே! அதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.