மட்டக்களப்பு – ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நல்லூர் வயற் பிரதேசத்திலுள்ள 19 அடியுடைய பொதுக்கிணறு ஒன்றிலிருந்து 67 வயதுடைய வயோதிபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நல்லூர் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான தம்பிராசா தவராசா என்பவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக நோயினால் பிடிக்கப்பட்டிருந்த இவர் நேற்று மதியம் தொடக்கம் காணாமல் போயுள்ளார். இதையடுத்து குடும்ப உறவினர்கள் தேடியபோது வீட்டிலிருந்து சுமார் முந்நூறு மீற்றர் தொலைவிலுள்ள பொதுக் கிணற்றிற்கு அருகில் செருப்பு காணப்பட்டதை அவதானித்துள்ளனர்.
பின்னர் நீளமான தடியொன்றை கிணற்றில் விட்டுப்பார்த்தபோது சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
திடீர் மரணவிசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசிர் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.
அதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடான் ஆயித்தியமலை பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.