பருத்தித்துறையிலிருந்து வல்வெட்டித்துறை வரையான வீதி புனரமைப்பு பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் நேரடியாக விஜயம் செய்து மேற்பார்வையிட்டார்.
இதன்போது, பொறியியலாளர்களை சந்தித்து கலந்துரையாடி வீதி அபிவிருத்தியின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
அத்துடன், எதிர்வரும் 3 ஆம் திகதிவரை சீரற்ற காலநிலை நிலவும் என்பதால், மழை முடிந்த பிறகு பணிகளை மீள ஆரம்பிக்குமாறு கோரிகை விடுத்தார்.


