திருகோணமலை – நிலாவெளி வீதியில் உப்புவெளி பஸ் நிலையத்திற்கு அருகில் இரண்டு கஜ முத்துக்களுடன் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் ஆவார்.
உப்புவெளி பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (17) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 08 கிராம் 160 மில்லிகிராம் நிறையுடைய 02 கஜ முத்துக்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பில் உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.