சென் ஜோசப் கல்லூரி மஸ்கெலியா.வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளில் மரதன் ஒட்டப் போட்டி பரிசளிப்பு நிகழ்வு. இன்று வெள்ளிக்கிழமை 14/02/2025 காலை இடம் பெற்றது.
மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரியின் மரதன் ஒட்டப் போட்டி இன்று மிகவும் இனிதாக இடம்பெற்றது.
கல்லூரியின் அதிபர் என்.பரமேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் விளையாட்டு துறை செயலாளர் எஸ்.சுரேஸ்குமார் நெறியாள்கையில் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
பெண்களுக்கான முதலாவது மரதன் ஒட்டப் போட்டி மவுசாக்கலை சந்தியில் இருந்து ஆரம்பமாகி சென் ஜோசப் கல்லூரி வரை சுமார் 04 KM இடம்பெற்றது.
ஆண்களுக்கான மரதன் ஓட்டுப் போட்டியானது மவுசாக்கலை நீர்த்தேக்க பகுதியில் உள்ள சமன் தேவாலய ஆலயத்திற்கு அருகிலிருந்து சுமார் 05 KM ஆரம்பித்து சென் ஜோசப் கல்லூரி வளாகத்தை வந்தடைந்து.
இதனை தொடர்ந்து கல்லூரியில் மரதன் ஒட்டப் போட்டி செம்பியன் மற்றும் 2ம், 3 ம் இடங்கள் மற்றும் முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், மற்றும் வெற்றிக் கிண்ணங்களை பிரதம விருந்தினர்கள்,பா.அ.சங்கம் அங்கத்தவர்கள், பாடசாலை உப அதிபர் நிக்ஸன் லெனின்,பாடசாலை ஆசிரியர்கள் குழாம்,ஆகியோரால் இணைந்து வழங்கி வைக்கப்பட்டது.


