யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணிகளை ஏற்றிச்சென்ற இலங்கை போக்குவரத்துச்சபை பேருந்து சாரதி மீது வாள்வெட்டு.
விசுவமடுப்பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பயணிகளை இறக்குவதற்காக பேருந்தை நிறுத்தியபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பேருந்தில் பயணித்த பயணிகள் நடு வீதியில் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

