இலங்கை நுவரெலியா மாவட்டம் தலவாக்கலை நகர் அருள்மிகு ஸ்ரீ கதிரேசப் பெருமான் தேவஸ்தானத்தில் உற்சவமூர்த்தியான சண்முகநாத பெருமானுக்கும் லிங்கேஸ்வர பெருமானுக்கும் மஹா கும்பாபிஷேகம் இடம்பெற்றது.
காலை விநாயகர் வழிபாட்டுடன் கிரியைகள் ஆரம்பமாகி விஷேட யாக பூஜைகள்.கும்பங்கள் வீதி பிரதிஷ்டணம் செய்யப்பட்டு உற்சவ மூர்த்தியான ஷண்முகநாத பெருமானுக்கும். லிங்கேஷ்வர பரிவார பெருமானுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
இதன்போது தலவாக்கலை சூழவுள்ள ஏராளமான பக்தர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.