கந்தானை பிரதேசத்தில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கி தாரியை கைது செய்ய கந்தானை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
கந்தானை பிரதேசத்திற்கு உந்துருளியில் சென்ற இருவர், வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கி தாரி உந்துருளியிலிருந்து இறங்கி வீதியைக் கடக்கும் காட்சிகள் சி.சி.ரி.வி கமரா ஒன்றில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, பொலிஸார் சந்தேக நபரின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்த படத்திலுள்ள நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கந்தானை பொலிஸ் நிலையத்தின் 071 – 8591595 அல்லது 071 – 8591594 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.