வடமராட்சி கிழக்கு வத்திராயனில் பனை மரம் ஒன்று ரெலிகொம் வயர் மீது முறிந்து விழுந்து காணப்படுகின்றது.
நீண்ட நாட்களாக வீதியின் அருகே ரெலிகொம் வயர் மீது விழுந்து காணப்படும் பனை மரத்தை அகற்றும் நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
சம்பவம் தொடர்பாக அப்பகுதி கிராம அலுவலர், ரெலிகொம் உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மரம் விழுந்து இருப்பதால் அதன் பக்கம் உள்ள மின் கம்பங்கள் விழும் அபாயத்தில் இருப்பதுடன் உரியவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.