விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டம் ஊடாக, அண்மையில் மீளத் திறக்கப்பட்ட சாவகச்சேரி வைத்தியசாலையின் இரத்த வங்கியினை சிறந்த முறையில் செயற்பட வழிவகுப்பதற்கு மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தின் இந்த 42 வது இரத்த தான முகாமானது எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே இரத்ததானம் செய்வதற்கு ஆர்வமுள்ள கொடையாளர்கள் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள 0773241755 அல்லது 0772988917 என்ற இலக்கத்தை தொடர்புகொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.