உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தைக் கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது.
நாளை செவ்வாய்க்கிழமை உழவர் தினமான தை முதலாம் திகதி பிறக்கவுள்ள நிலையில் தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற வாக்குக்கிணங்க தைப்பொங்கலை மக்கள் சிறப்பாகக் கொண்டாடவுள்ளனர்.
வவுனியா நகரப் பகுதியில் அதிக சன நெரிசல் காணப்படுவதுடன் பொங்கலுக்குத் தேவையான பானை, அகப்பை, கரும்பு, பட்டாசு, பழவகை என்பவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது.
கடந்த வருடத்தை விட இம்முறை மக்கள் அதிக ஆர்வத்துடன் பொங்கல் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்று வவுனியா வர்த்தகர்கள் தெரிவித்தனர்.