ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன இணைந்து களமிறங்கினால்கூட ஆளும் கட்சிக்குச் சவால் இல்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோரைச் சங்கமிக்க வைப்பதற்குரிய ஏற்பாடுகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“தற்போதைய அரசு நாட்டு மக்களுக்காகச் செயற்பட்டு வருகின்றது. மக்களின் தேவைகளே நிறைவேற்றப்பட்டு வருகின்றன. எனவே, அவர்கள் இணைந்தால்கூட அரசின் பயணத்துக்கு தாக்கமாக அமையப்போவதில்லை.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை இலக்கு வைத்து க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவில்லை. தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலை தேசிய தேர்தல் ஆணைக்குழு நடத்தும்.” – என்றார்.