யாழ்ப்பாணத்தில், மகளை தனியார் கல்வி நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சித்த தந்தை ஒருவர் மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது ஊரெழு கிழக்கு ஊரெழு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் கிருபரஞ்சன் (வயது 38) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் நேற்று (30) காலை மகளை கல்வி நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்கு மோட்டார் சைக்கிளை எடுத்துள்ளார். இதன்போது அவருக்கு உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு வந்து கதிரையில் இருந்தவேளை மயக்கடைந்துள்ளார்.
இந்நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சடலம் மீது உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Related Posts
விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு.!
ஹங்வெல்ல, எம்புல்கம - பனாகொட வீதியில் எம்புல்கம தேவாலயத்திற்கு அருகில் நேற்று வியாழக்கிழமை (25) அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து...
கோடாவுடன் இருவர் கைது.!
கஹவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலகமவத்த பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு வைக்கபட்டிருந்த கோடாவுடன் நேற்று வியாழக்கிழமை (25) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கஹவத்தை பகுதியயை சேர்ந்த...
குளத்தில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு.!
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்விளான் கிராம அலுவலர் பிரிவின் கல்விளாற்குளத்திற்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை (25) பிற்பகல் 3.00 மணியளவில் தூண்டிலில் மீன்பிடிக்கச்...
புதிய செயற்கை கால் தயாரிப்பு திட்டத்தின் ஆரம்ப விழா.!
அவயவங்களை இழந்த எமது மக்கள் முடங்கி போகாமல், அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, அவர்களின் வழமையான செயல்பாடுகளுக்கு உதவும் ஜெய்ப்பூர் நிறுவனம் தனது சேவைகளை முற்றிலும் இலவசமாக வழங்குவது எமது...
அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு தொடர்பில் முழுமையாக அரசாங்கத்தை மட்டும் விமர்சிக்க முடியாது.!
அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு தொடர்பில் முழுமையாக அரசாங்கத்தை மட்டும் விமர்சிக்க முடியாது. உலகளாவிய நெருக்கடியும் இதற்கு ஒரு காரணமாகும் என தேசிய மக்கள் முன்னணியின் ஸ்தாபகரும் நாபீர்...
போசாக்கு விழிப்புணர்வு நடைபவனியும், கண்காட்சியும்.!
போசாக்கு மாதத்தை முன்னிட்டு கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட போசாக்கு விழிப்புணர்வு நடைபவனியும், போசாக்கு விழிப்புணர்வு கண்காட்சியும் இன்றையதினம் நெல்லியடியில் இடம்பெற்றது. நெல்லியடி...
அகரவத்தை – லொனக் பிரதான பாதையை புனரமைக்குமாறு கோரிக்கை.!
அகரவத்தை தொடக்கம் லொனக் வரை சுமார் 4 கிலோமீற்றர் நீளமுள்ள பிரதான பாதை தற்போது மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இப்பாதையை நம்பி வாழும் சுமார் 750...
சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிப்பு; வர்த்தகர்கள் போராட்டம்.!
சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு, உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சாவகச்சேரி வர்த்தகர்கள் இன்று வெள்ளிக்கிழமை (26) கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ள...
இளம் பெண் வைத்தியர் கொ*லை; பொலிஸ் உயர் அதிகாரி கைது.!
தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் இயன்முறை சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். வலான மத்திய...
படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு.!
மாது ஆற்றில் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இருவர் மீது முதலை ஒன்று திடீரெனத் தாக்கியதில், படகு கவிழ்ந்து ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அம்பலாங்கொடை...










