கல்கிரியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெல்பெதியாவ பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் தேவஹுவ, கல்பாய பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஆவார்.
யானைகளிடம் இருந்து நெல் வயலைப் பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக போடப்பட்டிருந்த மின்கம்பியில் மின்சாரம் தாக்கி மரணம் ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அனுமதியின்றி மின்சாரக் கம்பி போடப்பட்டிருந்த வயலின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கல்கிரியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.