திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள்( 2024.12.12) மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள எல்லைக் கிராமங்களாகிய புளியடிச்சோலை, கங்குவேலி ஆகிய கிராமங்களுக்கு களப்பயணம் ஒன்றினை மேற்கொண்டார்,இப்பயணத்தின் போது மேற்படி கிராமங்களில் வாழுகின்ற மக்களை சந்தித்து அவர்கள் எதிர்நோக்குகின்ற குறுங்கால,நீண்ட கால சிக்கல்கள் பற்றி கலந்துரையாடியதோடு அவற்றை தீர்க்க தன்னாலான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.