நான்காவது நாளாக இன்றும் (22) ருஹுணு பல்கலைக்கழகத்தில் கல்விசார் மற்றும் கல்விசாரா சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தெரிவித்துள்ளது.
ருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேனவை அப்பதவியில் இருந்து நீக்குமாறு கோரி கல்விசார் மற்றும் கல்விசாரா சங்கங்கள் கடந்த 19ஆம் திகதியிலிருந்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, ருஹுணு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கம் நேற்று வியாழக்கிழமை (21) கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் இணைந்து பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் கலந்துரையாடினர்.