கொழும்பு மாவட்டம் கொம்பனி வீதி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை பகுதியில் நேற்று புதன்கிழமை (28) மாலை கஜமுத்துடன் இரண்டு இளைஞர்கள் கொழும்பு மத்திய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் ஜா – எல பிரதேசத்தில் வசிக்கும் 31 மற்றும் 27 வயதுடைய இளைஞர்கள் ஆவர்.
கொழும்பு மத்திய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கொம்பனி வீதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.