களுத்துறை மாவட்டம் பாணந்துறை, வேகட பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (29) காலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை, வேகட பிரதேசத்திற்கு உந்துருளியில் சென்ற இனந்தெரியாத இருவர், உந்துருளியின் உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் கடை ஒன்றில் இருந்த பணியாளர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.