கினிகத்தேன – நாவலப்பிட்டி பிரதான வீதியில் கினிகத்தேன நகருக்கு அருகில் அரச பேருந்தும், முச்சக்கரவண்டி மற்றும் வேன் ஒன்று மோதியதில் நேற்று (18) மாலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
நாவலப்பிட்டியிலிருந்து கினிகத்தேன நோக்கிச் சென்று கொண்டிருந்த அரச பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட வேன், அருகில் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதை அடுத்து, முச்சக்கரவண்டியும் பேருந்துடன் மோதிய பின்னர் குறுக்கே உருண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பாடசாலை மாணவர்கள் இருவர் மற்றும் முச்சக்கர வண்டியின் சாரதி ஆகியோர் காயமடைந்து கினிகத்தேன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்தில் முச்சக்கரவண்டி பாரிய அளவில் சேதம் அடைந்துள்ளதுடன், கினிகத்தேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.