பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞன் ஒருவன் நேற்று திங்கட்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் ஹோகந்தர பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞன் ஆவார்.
அத்துருகிரிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாலசிங்ககொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் பாதுக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடியுள்ளதாகவும் மாலம்பே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் விற்பனை நிலையம் ஒன்றில் திருடியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.