தியத்தலாவை தொடருந்து நிலையத்தில் தொடருந்தொன்று தடம்புரண்டுள்ளது.
கண்டியிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த தொடருந்தொன்றே இன்று (19) பிற்பகல் தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக மலைநாட்டுத் தொடருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT
எவ்வாறாயினும், தடம்புரண்ட தொடருந்தை தடமேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.