அனைத்து மக்களையும் ஒற்றுமையாக ஒரே குடையின் கீழ் அழைத்துச் செல்பவர்களை மக்கள் இந்தத் தேர்தல் ஊடாக தெரிவு செய்வார்கள் என பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் திருமதி சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார்.
14/11 வியாழக்கிழமை காலை சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்படி தெரிவித்திருந்தார்.
எனது வாக்குரிமையை நிறைவேற்றி விட்டேன். வெற்றி வாய்ப்பினை நம்பி எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.