திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் சட்டவிரோத தேர்தல் சுவரொட்டிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கிண்ணியா பிரதேசத்தில் உள்ள இரு கட்சி அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் நேற்று திங்கட்கிழமை (11) நள்ளிரவுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.