எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரச்சாரக் காலமானது திங்கட்கிழமை (11) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், திங்கட்கிழமை நள்ளிரவு முதல் பொதுத்தேர்தல் முடிவடையும் நேரம் வரை மௌன காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் அனைத்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, தேர்தல் சட்டத்தை மீறும் எந்தவொரு நபரையும் கைது செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.